staff development

பணியாளர் மேம்பாடு

தமிழ் விளக்கம்

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் திறமைகள் மற்றும் நடைமுறைகளை மாறிவரும் தேவைகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்த மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பணியாளர் மேம்பாடு எனப்படும். இந்தச் செயல்பாடுகள், பணித்தொடர்பான குறுகிய காலப் பயிற்சி அளித்தல், தேவையான, உபயோகமுள்ள தகவல்களைத் தந்துதவுதல், குழு ரீதியான பணியரங்குகளை நடத்துதல், நிபுணர்களையும் பேச்சாளர்களையும் அழைத்து வந்து பயிற்சி கொடுத்தல், அல்லது உரையாட வைத்தல், பணியாளர்களை வெளியிடப் பயிற்சிகளுக்கு அனுப்ப நிதியுதவி செய்தல் என்று பலவகைப்படும். பணியாளர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் உயர்த்துவதில் மட்டுமல்லாது நிருவாக நடைமுறைகளைக் காலத்திற்கேற்றவாறு மேற்கொள்வதிலும், பணியாளர் மேம்பாடு தவிர்க்க முடியாதது ஆகும். பணியாளர் மேம்பாடு, நிறுவனத் தேவைகளை / உரிமையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டாலும், அதனுடைய விளைவாக பணியாளர்களின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்தவும், அதற்கு செறிவூட்டவும், பணியில் முன்னேறவும் உபயோகப்படுகிறது. பணியாளர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலமாகத் திறன் மிகு தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொண்டு, நிறுவனச் செயல்பாடுகளை மனித மயமாக்க உதவுகின்றது.
பார்க்க: Inservice Training - பணியிடைப் பயிற்சி - ஒரு பணியாளரின், பணிக்கேற்ற ஆளுமையையோ அல்லது பணித்திறனையோ அல்லது குறிப்பிட்ட பணியில் மேலும் திறன் வளர்க்கவோ அவரை பணியிலமர்த்திய நிறுவனமே ஏற்பாடு செய்யும் பயிற்சிகள். இது பெரும்பாலும் மேற்பார்வையாளர்களாலோ, நிபுணர்களைக் கொண்டோ பணிபுரியும் இடத்திலே கொடுக்கப்படும் குறுகிய காலப் பயிற்சி. இதைப் பணியாளர் மேம்பாடுப் பயிற்சி எனவும் சொல்லலாம்.
Human Resources - மனித வளம் - மனித வளம் என்பது மானுட வாழ்க்கையை மேம்படுத்தவும், அதற்கு செறிவூட்டவும் பயன்படுகின்ற மானுட அறிவு, திறமை, சமூக உறவுகள், ஆளுமைத் தன்மை, படைப்பாற்றல், உழைக்கக்கூடிய திறன் போன்றவற்றின் தொகுப்பு ஆகும்.

English

Activities and programs within an organization designed to enhance the abilities of personnel to fulfill the existing and changing requirements of their jobs. These activities often include short-term in-service training classes, distribution of relevant information, group conferences, use of outside consultants and speakers to meet with personnel, and funding of certain employees to participate in meetings or training programs outside the organization. Staff development, although usually related to the requirements of the employer, also helps personnel improve overall career objectives and opportunities. It also helps the organization attract and keep competent personnel and clarify and "humanize" the organization. See also in-service training.