stage theories
வளர்ச்சிப் பருவக் கோட்பாடுகள்
தமிழ் விளக்கம்
மனிதரின் ஆயுட்காலத்தில் ஏற்படும் உடல், மன, சமூக மற்றும் வாழ்வனுபவங்களில் ஏற்படும் மாற்றங்களையே மனித வளர்ச்சி என்று குறிப்பிடுகிறோம். மனித வளர்ச்சி பல நிலைகளை / பருவங்களைக் (சிசுப் பருவம், குழந்தைப்பருவம், குமரப் பருவம், இளமைப் பருவம், நடுவயதுப் பருவம், முதுமைப்பருவம்) கொண்டது. ஒவ்வொரு பருவத்திலும் அப்பருவத்திற்குரிய சவால்களையும், இயடையூறுகளையும், முதிர்ச்சியையும், முன்னுரிமைகளையும், ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டும். மனித வளர்ச்சியென்பது தொடர் நிகழ்ச்சியாதலால் ஒவ்வொரு பருவமும் அப்பருவத்திற்கு முந்தைய பருவத்தில் பெற்ற முதிர்ச்சியையும், படிப்பினையையும் அடுத்த பருவதிற்கு எடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு பருவமும் அப்பருவதிற்குரிய சவால்களை எப்படி எதிர்கொள்கிறது, சங்கடங்களைச் சமாளிக்கின்றது என்பதை வைத்தே அதற்கடுத்து வரும் பருவங்களின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திலும் அதற்கென்றே இருக்கும் உள்விசை நிறைவு பெற்று, மனநிறைவுடன் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டுமென்றும், அப்படி நிறைவுறாத பட்சம், அது வளர்ந்த பின் உள்ளார்ந்த முரண்பாடுகளை உருவாக்கி, வளர்ச்சியை முழுநிறைவடைய விடாது என்றும் இக்கோட்பாடுகள் எடுத்துரைக்கின்றது. வாழ்க்கைப் பருவங்கள் மானுடவளர்ச்சியியல் அறிஞர்களால் பல்வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், சில வகைப்பாடுகள் எல்லோராலும் மேற்கோள் காட்டப்படுவதாக அமைந்துள்ளது. அதில் எரிக் எரிக்சன்னின் (Erik Erikson) உள சமூக அபிவிருத்திக் கோட்பாடு - எட்டு நிலைகள் (psycho social development), சிக்மண்ட் பிராய்டின் உளப்பாலியல் வளர்ச்சி / அபிவிருத்தி கோட்பாடு ஐந்து நிலைகள் (psychosexual development theory), கோல்பேர்க் (Kohlberg) என்பவரின் அறநெறி வளர்ச்சிப் பருவம் மூன்று படிகள், ஆறு நிலைகள் (moral development theory), ஜீன் பியாஜியேவின் (Jean Piaget) அறிதல் திறன் மேம்பாடு, புலனுணர்வு மேம்பாடு வளர்ச்சி நிலைகள் (நான்கு நிலைகள்) (Cognitive Development) கோட்பாடுகள் மிக முக்கியமானது.
உள சமூக அபிவிருத்திக் கோட்பாடு (எட்டு நிலைகள் 1. அடிப்படை நம்பிக்கை Vs நம்பிக்கையின்மை (Hopes: Trust vs. Mistrust), 2. சுயசெயற்பாடு Vs வெட்கமும் சந்தேகமும் (Autonomy vs. Shame & Doubt), 3.ஆர்வம் Vs குற்ற உணர்வு (Initiative vs. Guilt ) 4 விடாமுயற்சி Vs தாழ்வுணர்வு, (Industry vs. Inferiority) 5. சுயஅடையாளம் Vs கடமைக் குழப்பம் (Identity vs. Role Confusion), 6. நேசம் Vs தனிமையாக்கம் (Intimacy vs. Isolation), 7. ஆக்கம் Vs அசைவற்ற தன்மை (Generativity vs. Stagnation), 8 அக உறுதிப்பாடு. Vs நம்பிக்கையிழப்பு (Ego Integrity vs. Despair).
உளப்பாலியல் வளர்ச்சி / அபிவிருத்தி கோட்பாடு (psychosexual development theory) - ஐந்து நிலைகள் 1.வாய்வழிப் பருவம் அல்லது சப்பும் பருவம் (oral phase), 2. குதப்பருவம் அல்லது ஆசனவாய்ப்பருவம் (anal phase), 3. குறியின்பப் பருவம் (phallic phase or oedipal stage), 4. கண்ணயர்வுப் பருவம் அல்லது, மொட்டவிழாப் பருவம் (latency stage), 5. இனப்பெருக்கப் பருவம் (genital stage)
அறநெறி வளர்ச்சிப்பருவங்கள் - மூன்று வகைகள், ஆறு நிலைகள் 1.வழக்கமாவதற்கு முந்தைய அறநெறி / நல்லொழுக்கப் பிரக்ஞைக்கு முந்தைய நல்லொழுக்கம் (Pre-Conventional), 2. வழக்கமான / இயல்பான / உறுதிப்படுத்தப்பட்ட நல்லொழுக்கம் (Conventional) 3. வழக்கத்தைக் கடந்த / பிறருக்காக அன்றி தானே ஏற்றுக்கொண்டு பின்பற்றும் நல்லொழுக்கம் / சுதர்மம் (Post-Conventional).
அறிதல் திறன் மேம்பாடு, புலனுணர்வு மேம்பாடு வளர்ச்சி நிலைகள் - நான்கு நிலைகள் (Cognitive Development) 1. தொட்டுணர்வதால் ஏற்படும் அறிவு வளர்ச்சிப் பருவம் அல்லது புலன் இயக்கச் சிந்தனை வளர்ச்சி (sensorimotor stage) 2. முற் சிந்தனை வளர்ச்சி (pre operational stage), 3. பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (concrete operation stage), 4. முறையான சிந்தனை வளர்ச்சி .(formal operation stage).

English
The concept that every period of life is characterized by some underlying challenges and orientations that modify one's behavior and priorities. Each stage has characteristics that make it unique, and each higher stage incorporates many of the gains made in earlier ones. The degree to which one reconciles the conflicts inherent in each stage largely determines the likelihood of coping successfully in subsequent life stages. Among the best known of these concepts are Erik Erikson's psychosocial development theory; Sigmund Freud's psychosexual development theory; Kohlberg moral development theory; Piaget's theory of cognitive development; and the concepts delineated by Roger Gould, Daniel Levinson, Bernice Neugarten, Talcott Parsons, and Robert Bales.