stakeholding
ஆதாய நாட்டமுடமை
தமிழ் விளக்கம்
இது உள்விரிவாக்கம் கொண்ட பல பொருள்தரும் சொல்லாட்சி. இது, ஒன்றில் ஒருவர் வைத்திருக்கும் எதிர்பார்ப்பையும், நிச்சயமற்ற (இடரான) ஒரு விஷயத்தில் பணயம் வைத்தலையும் (ஈடுபடுவதையும்) குறிக்கும் சொல். பொதுவாக ஒருவரின் ஆதாய நாட்டமுடமையைக் (எதிர்பார்ப்பை) குறிக்கும் சொல். ஒரு செயலில் தனக்கு என்ன மாதிரியான ஆதாயாம் கிடைக்கும், அந்தச் செயலால் தன்னுடைய ஆதாயங்கள் எப்படியெப்படியெல்லாம் பாதிப்பிற்குள்ளாகும் என்று கணிக்கும் மனோ நிலை. திட்டமிடலில், எந்தெந்த மாதிரியான சமூகநலக் கொள்கைகள் பொதுமக்களின் / ஏழைகளின் பங்கேற்பை, பொறுப்புணர்வைத் தூண்டும் என்பதைச் இச்சொல்லால் குறிப்பர். எடுத்துக்காட்டாக, ஏழைகளுக்கு நேரடியாகப் பண வடிவில் கொடுக்கப்படும் சமூகநல உதவிகள் அவர்களைச் செலவழிக்கத் தூண்டுமெனவும், அதற்குப் பதிலாக அவர்கள் சொத்துக்களைச் சேர்க்கவோ அல்லது அவர்களின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக அமையும்படியோ அவர்களைச் சேமிக்கச் செய்யும் பட்சம் அவர்களின் ஆதாயநாட்டமுடமையைத் தூண்டி, அந்த திட்டத்தில் பங்கேற்கத் தூண்டும் என்பது திட்டமிடுபவர்களின் அனுமானம். குறிப்பாக ஒரு செயலின் மூலமாக மக்கள் பெறவிருக்கும் ஆதாயத்தைத் தூண்டிவிடுவது. வீடற்ற ஏழைகள், தங்களுக்கென சொந்த வீட்டைப் பெற, அதற்கென்று குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் சேமிக்கும் போது, அரசு அதற்கு இணையாக பணத்தை செலுத்தும் என்று அரசு கொடுக்கும் உத்தரவாதம் அல்லது ஓய்வுகாலப் பாதுகாப்பிற்கான பணத்தைச் சேமிக்கும் போது அதற்கு இணையான பணத்தை அரசு செலுத்தும் என்பதும் அவர்களின் ஆதாயநாட்டமுடமையைத் தூண்டும். ஏழைகளை, நலம் பயக்கக் கூடிய / ஆதாயம் தரக்கூடிய செயல்களில் பங்கேற்க வைக்கும்படியான அரசின் சமூகநலக் கொள்கைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
English
A social welfare policy in which poor people receive assets and incentives to accumulate assets instead of income transfers only (which some say encourages spending rather than saving). For example, the government could establish for qualified families an individual development account (IDA) in which it matches the money the client saved for specified purposes, such as retirement or purchase of a house.