stammering

திக்குவாய், நாத்தடுமாற்றம், நாக்குத்தட்டுதல், தெற்றுவாய், உல்லாபம், நிரம்பாமென்மொழி

தமிழ் விளக்கம்

உச்சரிக்க வேண்டிய அல்லது சொல்ல வேண்டிய சொற்களைத் தெளிவாகவும், சீராகவும், கோர்வையாகவும் சொல்ல இயலாது, ஒரு மனிதன் தன் எண்ணத்தைச் சொற்களின் மூலம் வெளிப்படுத்த இயலாது போராடும் அவலநிலையே திக்குவாய் எனப்படும். திக்குவாய் மிகவும் நுட்பமான பிரச்சினை. இது வியாதில்ல. உடல் ஊனமும் அல்ல. ஒரு வகையான மனச்சிக்கல். திக்குவாய் பிரச்சினை வாயில் இல்லை. அது மூளையில் உள்ளது. நம்மை எல்லோரும் கவனிக்கிறார்களே என்ற பதட்டமும், சரியாகப் பேசுவோமோ என்ற பயமும், சீக்கிரமாகப் பேசி முடித்து விட வேண்டும் என்ற அவசரமும் இந்தப் பிரச்சினையின் ஆணிவேர். இதைத் தனி மனிதனின் தகவல் தொடர்பு முறையில் ஏற்படும் தடங்கல் என்று கூறுவதுமுண்டு. ‘‘பேசும் சொற்களின் எண்ணிக்கையோ அல்லது சீர் நிலையோ, குறிப்பாக மெய்எழுத்துக்கள் பாதிக்கப்படுவதால் சொற்களின் கோர்வை பாதிக்கப்படும் நிலையே திக்குவாய்' என்று உலக சுகாதார அமைப்பானது (WHO) திக்குவாய்க்கு விளக்கம் அளிக்கின்றது.
பார்க்க: cluttering - உணர்ச்சிப்பேச்சு, கேட்பவர் திறனைத் தடுக்கும் விதத்தில் அமைந்த ஆரவாரமான பேச்சு - வேகமாகப் பேசுதல், ஓசை ஒழுக்கின்றி இரைச்சலாகப் பேசுதல், பிசுரடித்த குரலில் பேசுதல் போன்ற அறிகுறிக்களால் கேட்பவருக்கு பேச்சுப் புரிபடாத நிலை.
Expressive Language Disorder - மொழியின் மூலமாக வெளிப்படுத்துவதில் கோளாறு, வாய்மொழி மற்றும் எழுத்து மூலமாகத் தொடர்பு கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் - மொழி வெளிப்பாட்டுச் சிக்கல்கள் அல்லது மொழியின் மூலமாகத் (வாய்மொழி மற்றும் எழுத்து) தொடர்பு கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் என்பது அடிப்படையில் தகவல் தொடர்புச் சீர்கேடாகும். இவர்களிடம் கருத்துக்கள் இருந்தாலும் அந்தக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கேற்ப சொல்வளம் இல்லாதது, சொற்களைப் போதுமான அளவிலும், புரியும்படியாயும் வார்த்தைகளாக்க முடியாதது, வினையின் காலத்தை தெளிவில்லாமல் பயன்படுத்துவது, (errors in tenses) கருத்துகளை வெளிப்படுத்துவதில் சிரமப்படுவது போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்தச் சீர்கேடு கற்றல், தொழில் செய்தல் மற்றும் தொடர்பாடலில் குறுக்கிட்டுத் திறனழிக்கும். இது வளர் பருவச் சீர்கேடாகக் கருதப்பட்டாலும், (Developmental expressive language disorder) தானகச் சரியாகாது, இதைச் சரிசெய்ய பேச்சுப் பயிற்சி சிகிச்சை தரப்படவேண்டும். சில நேரங்களில் மருத்துவக் காரணங்களாலோ, அதிரிச்சியாலோ மூளை பாதிப்பிற்குள்ளாவதாலும், வலிப்பினாலும் இந்தச் சீர்கேடு உருவாகலாம்.

English

See stuttering.