standard deviation (SD)

நியம விலகல், சாரசரி அகற்சி, நிகழ்வாய்ப்பு விலகல், நியமச்சாய்வு

தமிழ் விளக்கம்

தரவுத் தொகுதியின் சராசரியில் இருந்து பொதுவாக ஒரு எண் (தரவு) எவ்வளவு விலகி இருக்கின்றது என்று அறிய உதவும் ஒரு கணிப்பு / அல்லது அளவுக்குறி. சராசரியில் இருந்து விலகும் ஒரு தரவு, கூடவோ குறையவோ இருக்கலாம் என்பதால், வெறும் பரும அளவை மட்டும் கணிப்பதற்காக இந்த விலகல்கள் தன்னால் பெறுக்கப்படுகின்றன (இருமடி). ஆகவே இதனைச் (சராசரியிலிருந்து) சீரிய விலக்கம் எனலாம். இதில் சீரிய என்பது சீர்+இய = சீரான, சீர்மையான, சீர்மை செய்த என்பது வேறுபாடுகளை இருமடியாக்கி அவற்றைக் கூட்டித் தரவுகளின் எண்ணிகையால் வகுத்து, அவற்றின் வருக்கமூலம் (இருமடிவேர்) எடுத்து சீர்செய்வதால், சீரிய என்று பொருள்படும். எனவே இதைச் சீரிய விலக்கம் அல்லது சீரிய விலகுபாடு எனலாம்.

English

A statistical measure to indicate the degree of dispersion of a distribution. It is the average difference between individual scores and the mean score in a distribution, obtained by squaring the deviation scores, adding them together, dividing by one less than the number of scores, and taking the square root of the result. In a normal (symmetrical or bell-shaped) distribution, 6.2 percent of the cases will fall between + 1 or -1 standard deviation from the mean; 95.4 percent will fall between +2 or -2 standard deviations; and 99.7 percent of the cases will fall between +3 or -3 standard deviations.