standard of living
வாழ்க்கைத்தரம்
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில், ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழும் தனி மனிதர்கள், குழுக்கள், பொருளாதார வர்க்கத்தினர் அல்லது மொத்தச் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய கிடைக்கும் வளங்கள், வசதிகள், நுகர்பொருட்களின் அளவையும் தன்மையையும் குறிக்கும் கருத்தாக்கம். வாழ்க்கைத்தரத்தை நுகர்வுத் தரத்தோடு ஒப்பிடக்கூடாது. நுகர்வுத்தரம் என்பது நுகர்வுப் பொருட்களோடு சம்மந்தப்பட்டது. வாழக்கைத் தரம் என்பது வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் அதன் தரம், ஏழ்மை விகிதம், தரமான வீட்டுவசதியும் அதைப் பெற முடிதலும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உழைக்கவேண்டிய வேலை நேரம், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள், பணவீக்க விகிதம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு வசதிகள், நோய்வாய்ப்படும் நிலை, இலவசமாகவோ அல்லது முடிந்த அளவு கட்டணம் செலுத்தியோ பெறமுடிந்த மருத்துவ வசதி, சராசரி வாழ்நாள், கட்டமைப்பு வசதி, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை, சுற்றுச் சூழல் தரம், சீதோஷ்ண நிலை மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை போன்ற விரிவான குறியீடுகளை உள்ளடக்கியது. standard of living மற்றும் quality of life என்ற இரு கருத்தாக்கங்களும் ஒரே பொருள் தருவது போலத் தோன்றினாலும், qality of life என்பது வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிட்டுள்ளவற்றை (ஆரோக்கியம், தரமான கல்வி, குடிநீர்) அனுபவிக்கும் உரிமையைக் குறிப்பது.
English
A concept comprising the necessities, luxuries, and comforts an individual, group, class, or society needs or uses to live in a particular circumstance. The concept is often confused with "standards of consumption". Consumption involves the availability of consumer goods to the individual or the society. "Standard of living" includes available consumer goods but adds choices and variety of these goods, normal working conditions, amount of leisure time, and opportunities for using that time. See also lifestyle.