standardized tests

தரப்படுத்தப்பட்டச் சோதனைகள்

தமிழ் விளக்கம்

மனிதர்கள் மற்றும் நிகழ்வுகளின் தன்மை பற்றி துல்லியமாக அளவிட சமூகவியல், உளவியல், கல்வியியல் மற்றும் நோயறிவியல் ஆய்வாளர்களால் மீண்டும் மீண்டும் உபயோகிக்கப்பட்டும் சோதனை முறைகளைத் தரப்படுத்தப்பட்ட சோதனை முறைகள் எனலாம். இச்சோதனைகள் பலரிடமும், பலநிலைகளிலும் பரிசோதிக்கப்பட்டு, அதன் செல்லத்தக்க நிலையும் நம்பகத்தன்மையும் பலராலும் நம்பத்தகுந்த அளவில் நிரூபிக்கப்பட்டிருக்கும். தரப்படுத்தப்பட்ட அல்லது தர நிர்ணயப்படுத்தப்பட்ட சோதனைகள், அதை எப்படிச் செய்வது என்ற வழிகாட்டி விளக்கங்களுடன், அதாவது சோதிப்பதற்கான நேர அளவு, சோதனை நெறிகள், மதிப்பிடும் முறை, அந்த மதிப்பெண்களை சோதனைக்குட்படுத்தப்பட்ட குழு மற்றும் பொதுநிலையில் வைத்து ஒப்பிடும் முறைகளையும் விளக்கிச் சொல்லும்.

English

Measurement tools used by social researchers, educators, and clinicians. The tests have already been used on many subjects, permitting a high degree of confidence in their validity and reliability. Standardized tests provide instructions, scoring procedures and standards, time limits, norms, and statistical data to make possible comparisons of the sample group with a much larger segment of society.