Starr, Ellen Gates (1859-1940)

ஸ்டார், எலன் கேட்ஸ் (1859-1940)

தமிழ் விளக்கம்

ஸ்டார், எலன் கேட்ஸ் (1859-1940) - சமுதாய அமைப்புப் பணியின் தாயென்றும், நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியென்றும் போற்றப்பட்ட ஜேன் ஆடம்ஸ் அம்மையாரின் நெருங்கிய தோழி. இருவரும் இணைந்து ஹல் மாளிகை என்ற சமுதாய ஊழியரகத்தை சிகாகோவில் ஆரம்பித்தனர். இவர் வழக்கறிஞராகி தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு தொழிலாளர் நலனுக்காகப் பாடுபட்டார். பிளாரன்ஸ் கெல்லி அம்மையாருடன் இணைந்து, குழந்தைத் தொழிலாளர் நலன் மேம்பாட்டிற்காகவும் பங்களிப்பாற்றினார்.
பார்க்க: Hull House - ஹல் மாளிகை - சமூகப்பணியில் சமுதாய அமைப்புப் பாடமுறையை தோற்றுவித்தவர் என்ற பெருமைக்குரிய ஜேன் ஆடம்ஸ் மற்றும் எலன் கேட்ஸ் ஸ்டார் என்ற இரண்டு பெண்மணிகளால், 1889 ஆம் ஆண்டு சிகாகோ நகரத்தில் ஐரோப்பியாவிலிருந்து புலம் பெயர்ந்த மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்கப்பட்டதுதான் Hull House என்றழைக்கப்பட்ட சமுதாய ஊழியக் குடியிருப்புக் குழு அல்லது கூட்டுவாழ்வுக் குழு (Settlement House). இதுதான் அமெரிக்காவில் உருவான முதல் சமுதாய ஊழியத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டு வாழ்வுக்குழு. இது மாதிரியான ஊழியர் கூட்டு வாழ்வுக் குழுக்கள் வறுமை வயப்பட்ட நகர்ப் புறச் சேரிகளில் தொடங்கப்பட்டு, அம்மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான அனைத்துச் சேவைகளும், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியையும் வழங்கின. Hull House ஊழியர் குடியிருப்பை முன்மாதிரியாக வைத்து 1920 களில் அமெரிக்காவெங்கும் 500 ஊழியர் குடியிருப்பகங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. 1965 hull house அமெரிக்காவின் தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு அருங்காட்சியாகமாக்கப்பட்டுள்ளது.

English

Cofounder, with Jane Addams, of Hull House in Chicago in 1889, Starr later worked as an advocate in the trade union movement and for improved conditions for workers. She also worked closely with Florence Kelley to improve child labor conditions.