status
நிகழ்நிலை, குமுகாய்ப் படிநிலை, தகுநிலை, தகுதி நிலை, சமுதாய அந்தஸ்து, சமுதாயப்படி நிலை
தமிழ் விளக்கம்
கலாச்சார ரீதியாக வரையுறுக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் அல்லது ஏற்றுச் செய்யும் கடமைகளை சமுதாயத் தகுநிலை அல்லது சமூக அந்தஸ்து என்கிறோம். இந்த நிலையை ஒருவர் தன் முயற்சியாலோ (சமூகப்பணியாளர், நிர்வாக இயக்குனர்), முயற்சியின்மையாலோ (வீடற்றவர், போதை பழக்கதிற்கு அடிமையானவார்) அடையும் போது அதை ஈட்டிய (எய்திய) தகுநிலை, முயன்று பெற்ற சமூகநிலை achieved status எனவும், பிறப்பினால் அல்லது மரபு வழியால் அடையும் நிலையை (இன்ன ஜாதி, பெண், தமிழன், பெங்காலி) போன்ற பிறவிசார் சமூகநிலை, உற்ற தகுநிலை (ascribed status) எனவும் வகைப்படுத்தப்படுகிறது. இது தன்மானம், செல்வாக்கு, கீர்த்தி போன்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பார்க்க: Social status - சமுதாயத் தகுநிலை, சமூக அந்தஸ்து - சமூக அந்தஸ்து அல்லது சமூகத் தகுநிலை என்பது ஒரு சமுதாயப் படிநிலையில் மற்றவர்களை ஒப்பிடும்போது ஒருவருக்கு இருக்கும் மரியாதை, அதனடிப்படையான வாழ்வு முறை, உரிமைகள் மற்றும் கடமைகளைக் குறிக்கும். சமூகத் தகுநிலை ஒருவரின் பிறப்பால் வரும் (பாலினம், வயது, இனம், குடும்ப மரபு) உற்ற தகுநிலை (ascribed status), ஒருவர் தன் திறமையாலும் ஆளுமையாலும் (கல்வி, பதவி, சாதனைகள்) ஈட்டிய / எய்திய) தகுநிலை (achieved status) என்று இருவகைப்படும். சமூகத் தகுநிலையே, ஒருவர் மற்றவர்களுடன் எப்படி தொடர்பு கொள்கிறார், மற்றவர்கள் இவருடன் எப்படித் தொடர்பு கொள்ளவேண்டும் என்பதையும், பரஸ்பர சமூக இடைவெளியையும் (social intimacy & social distance) நெருக்கத்தையும் தீர்மானிக்கின்றது.

English
A social position that carries culturally defined expectations or roles. Statuses may be "achieved" (such as social worker, homeless person, or government bureaucrat) or "ascribed" (such as woman, Hispanic, or child). Many lay people use this term as a synonym for "prestige".