Statute of Labourers

தொழிலாளர் சாசனம்

தமிழ் விளக்கம்

தொழிலாளர் சம்மந்தமாக இங்கிலாந்தில் எட்வர்ட் (மூன்றாம்) அரசர் காலத்தில் போடப்பட்ட சட்டம். இங்கிலாந்தைப் பாதித்த கடுமையான பிளேக் நோயால், 30-40% மக்கள் இறக்க, அதனால் ஏற்பட்ட விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட, திடகாத்திரமானவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை நிறுத்தி, 60 வயதிற்குட்பட்ட வேலையற்ற திடகாத்திரமானவர்களுக்கு யாராவது வேலையளிக்க முன்வந்தால் அவர்கள் மறுக்காமல் வேலைக்குச் செல்ல வேண்டுமென்றும், வேலையற்றவர்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறத் தடை விதித்தும், வேலையாட்கள் தட்டுப்பாடால் கூலி உயர்வதைத் தடுக்க அதிக பட்சக் கூலியை நிர்ணயித்தும், வேலையாட்களைப் பெற முதலாளிகள் அதிகக் கூலி கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தியும், ஓரிடத்தில் வேலைபார்ப்பவர்களை ஆசைகாட்டி வேலைக்கு அழைப்பதை நிறுத்தவும் இச்சட்டம் வகை செய்தது.

English

One of the world's earliest public welfare programs, initiated in England in 1349, it forbade giving charity to able-bodied people, compelled unemployed people to work for anyone who would hire them, forbade unemployed people to leave their hometowns or villages (or allowed them to go only to areas where there was work), and fixed the maximum wages that could be paid to workers.