stepfamily

தாய் அல்லது தந்தையின் மறுமணத்தின் மூலம் உருவான குடும்பம், மாற்றாங் குடும்பம், மீட்டெடுக்கப்பட்ட குடும்பம், பலதாரப் பிள்ளைகள் கொண்ட குடும்பம்

தமிழ் விளக்கம்

தாயோ, தந்தையோ மறுமணம் செய்துகொள்வதன் மூலமாகக் கிடைக்கும் சொந்தங்களைக் கொண்ட குடும்பம். இந்தக் குடும்பத்தில் ஒரு மாற்றாந் தந்தையோ (தாயின் கணவர்), மாற்றாந் தாயோ (தந்தையின் மனைவி) மாற்றாம் உடன்பிறப்புகளோ (முந்தைய திருமணத்தின் மூலம் மாற்றாந் தாய்க்கோ, தந்தைக்கோ பிறந்த குழந்தைகள்) இணைந்திருப்பார். விவாகரத்து விகிதங்களும், மறுமண விகிதங்களும் அதிகரித்து வரும் நிலையில் மாற்றாங் குடும்பங்கள் ஒரு முக்கிய குடும்ப வகையாகின்றன.
பார்க்க: reconstituted Family - தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கப்பட்ட குடும்பம், மீட்டெடுக்கப்பட்ட குடும்பம் - விவாகரத்து பெற்று தனித்து வாழும் ஆண் பெண் இருவர், தங்களின் முந்தைய திருமணத்தின் மூலம் பெற்ற குழந்தைகளோடு, மீண்டும் சட்டப்படி திருமணம் புரிந்துகொண்டு ஒரே குடும்பமாக ஆவது.
Blended family - பலதாரப் பிள்ளைகள் கொண்ட குடும்பம் - ஒரு தம்பதியினரின் முந்தைய திருமண உறவின்மூலம் பெற்ற குழந்தைகளுடன் வாழும் குடும்பம். பல்வேறு வகையில் உறவுடைய சொந்தங்கள் கூடி வாழும் குடும்பம்.

English

A primary kinship group whose members are joined as a result of second or subsequent marriages. Such a family may include a stepfather (the husband of one's mother), a stepmother (the wife of one's father), a stepchild (the offspring of one's spouse by a previous marriage or relationship), and stepbrothers and stepsisters (the children of one's stepparent). Owing to the increased divorce and remarriage rates, stepfamilies constitute a major type of family constellation. See also reconstituted family and blended family.