stereotypic movement disorder
அனுவாத இயக்கக் கோளாறு, ஒரேமாதிரியான தசை இயக்கக் கோளாறு
தமிழ் விளக்கம்
நோக்கம் ஏதுமில்லாமல், ஒரே மாதிரியாகத் தன்னிச்சையற்ற, வேண்டுமென்றே, திரும்பத் திரும்பச் செய்யும், குறிப்பாக குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தில் செய்யும் சைகைகள் அல்லது செயல்கள். ஒரே சீரான தாளகதியில், பற்களை நரநரவென்று தேய்த்தல், உடலை முன்னும் பின்னுமாக ஆட்டுதல், தலையில் அடித்துக்கொள்ளல், தோலைப் பிய்த்துக்கொள்ளல், மீண்டும் மீண்டும் குரலெழுப்புதல் இதனுடைய அறிகுறிகளாகும். இது கடந்த காலத்தில் ஒரேமாதிரியான பழக்கக் கோளாறு எனப்பட்டது.
பார்க்க: multiple tic disorder - திடீரெனத் தசை இழுத்தல், துடிக்கை, விறுவிறுத்தல், வலிப்புக் கொள்ளுதல், விடைத்தல், முகச்சுரிப்பு வலி, முகத்தசைகளின் இசிப்புநோய், முகபாரிசவாயு, சொடுக்கு, தசை நடுக்கம், தசை இழை அனிச்சை இயக்கம், துடிப்பு - நடுக்கக் கோளாறுகள் என்பது திரும்பத்திரும்ப வரும் ஒத்திசைவற்ற தசை இயக்க நடுக்கங்களாக மற்றும் குரல் நடுக்கங்களாக வெளிப்படும். நடுக்க நோய்கள் பார்வைக்கு புலப்படா வகையில், வயிற்றுத் தசை இறுக்கம், பெருவிரலில் கடுகடுப்பு போன்றவையும், கண்ணடித்தல், தொண்டைக் கணைப்பு போன்ற அறிகுறிகளும் தென்படும். இது வலிப்புகளான ஒழுங்கற்ற முறையில் திரும்பத் திரும்ப விரைவாக உதறலுடன் செய்யப்படும் உடலசைவுகள் (chorea), தானாயியங்குந் தசைச் சுருங்கல், வலியேற்படுத்தும் தசைச் சுருக்கம், தசை வலித் துடிப்பு (dystonia), ஆட்டிச நோயாளிகளுக்கு ஏற்படும் நடுக்கம் போன்றவற்றிலிருந்து வேறுபட்டது. இந்த நடுக்கச் சீர்கேடுகளும் பலவகைப்பட்டது. குறுகியகால நடுக்கச் சீர்கேடு, நாள்பட்ட மோட்டார் அல்லது குரல் நடுக்கச் சீர்கேடு, ஒருங்கிணைந்த குரல் மற்றும் பல மோட்டார் (இயக்க) நடுக்கச் சீர்கேடு [கில்லஸ் டெ லா டூரெட்], பிற நடுக்க சீர்கேடுகள், வகைப்படுத்தமுடியாத நடுக்க கோளாறு என்று பலவகைப்படும்.

English
A disorder of infancy, childhood, and adolescence characterized by intentional and repetitive gestures or activities that have no socially acceptable purpose. Some of these behaviors include teeth grinding, body rocking, head banging, hitting oneself, skin picking, or repetitive vocalizations, often performed in a rhythmic fashion. This condition was formerly known as "stereotypic habit disorder". See also Tourette's disorder and tic disorder.