sterilization
கருத்திற வளம்கெடுத்தல், மலடாக்குதல், கிருமி நீக்கம், நோய் நுண்ம ஒழிப்பு, நோய்நுண்ம நீக்கம், நுண்ணுயிரகற்றல், நுண்ணுயிரின்மை, தொற்றுநீக்கல்
தமிழ் விளக்கம்
1. கருத்தடை என்பது ஒரு ஆணோ பெண்ணோ இனப்பெருக்கம் செய்யும் திறனை மருத்துவ ரீதியாக முடிவுக்குக் கொண்டுவருதல். இதில் பல மருத்துவ முறைகள் கையாளப்படுகின்றான். அதில் ஆண் இனப்பெருக்க ஆற்றலை நிரந்தரமாகத் தடுக்கும் வாசெக்டமி (Vasectomy) மிக முக்கியமானது. இந்த முறையில், விந்து வெளியேறுவதைத் தடுக்க ஆணின் விந்துக்குழாய் அல்லது விந்துநாளத்தைத் துண்டித்து, கட்டி வைத்து அல்லது அடைப்பிட்டு மூடி செய்யப்படும் நவீன, எளிய அறுவை சிகிச்சை அகும். இது ஆண்களுக்கானக் கருத்தடைச் சிகிச்சை அல்லது குடும்ப நல அறுவைச் சிகிச்சை அல்லது குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. இது பெண்களுக்கானக் கருத்தடை அறுவைச் சிகிச்சையை விட மிக எளிமையானது.
2. பொருட்களின் (உணவு, திரவ உணவு, மருத்துவ உபகரணங்கள், வேறு பல பொருட்கள்) மேற்பரப்பில் உள்ள அனைத்து வகை நுண்ணங்கிகளையும் அழிக்கும் அனைத்து முறைகளும் கிருமியழித்தல் (sterilization) என அழைக்கப்படும். கிருமியழித்தல் மூலம் பக்டீரியா, பூஞ்சை, புரொட்டிஸ்டுக்கள், வைரசுகள் உட்பட அனைத்துக் கிருமிகளும் இல்லாதொழிக்கப்படுகின்றன. அதிக வெப்பநிலைக்குச் சூடாக்கல், இரசாயனங்களைப் பயன்படுத்தல், அதிக அமுக்கத்தை வழங்கல், கதிர்வீச்சு (x கதிர்கள், காமா கதிர்கள்) பயன்படுத்தல், நுண் துளைகளூடாக வடிகட்டல் மூலம் கிருமியழித்தலை மேற்கொள்ள முடியும்.

English
A medical procedure that ends a person's ability to reproduce. This method of permanent birth control or reproductive technology usually involves tubal ligation or vasectomy (tying off a man's vas deferens). Attempts to reverse sterilizations have limited success rates.