steroids

இயக்க ஊக்கிகள், ஸடீராய்டுகள், ஊக்கியம்

தமிழ் விளக்கம்

இயற்கையான இயக்கு நீர்களாலோ அல்லது செயற்கையான மூலக்கூறுகளைக் கொண்டோ மூட்டுவலி, கீழ்வாதம், சுவாச காசம் (asthma) போன்ற நோய்களுக்கும், வலியைப் போக்கும் வலி நீக்கியாகவும், காய்ச்சலைக் குறைக்கும் காய்ச்சலடக்கியாகவும், அழற்சியைக் கட்டுப்படுத்தாவும் உபயோகப்படுத்தப்படும் மருந்து. இது வலியைப் போக்குவதுடனில்லாமல், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுவதால், விளையாட்டு வீரர்களாலும், உடற்கட்டுப் பயிற்சியாளர்களாலும், அதிக தசைத்திறல் கொண்டு உடல் எடை கூட்ட விரும்புவார்களாலும் அதன் நீண்டகாலப் பயன்பாட்டினால் ஏற்படும் பக்கவிளைவுகளை கருத்தில் கொள்ளாமல் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் வளர்ச்சி ஊக்கியக்க பயன்படும் இம்மருந்து காலப்போக்கில் ஆற்றலைக் குறைத்து, மன அழுத்தத்தை உண்டாக்கி, கல்லீரல் தொடர்பான சீர்கேடுகளை உருவாக்கி நல்வாழ்வைக் கெடுக்கும்.

English

Drugs based on natural hormones or synthetics intended for use in treating inflammations, arthritis, asthma, and other disorders. Steroids are rapidly becoming a drug of abuse, especially by athletes, body builders, and others wanting to look more muscular but who risk serious long-term physical and social consequences of using them improperly. In prolonged misuse, the initial sense of enhanced well-being, strength, and energy is replaced by depression, irritability, low energy, and general medical conditions, especially liver disease.