stimulants

தூண்டிகள், எழுச்சியுண்டாக்கிகள், கிளர்ச்சியூக்கிகள், உத்தீபனம்

தமிழ் விளக்கம்

உபயோகப்படுத்துவோருக்கு தூக்கத்தைப் போக்கி, சோர்வையகற்றி, இலேசானது முதல் மிகத் தீவிரமான நன்னிலையுணர்வும் (பரவசநிலை), உஷார்நிலையும், உட்சபட்ச விழிப்புணர்வையும் தரும் உளஇயக்க / உளத்தூண்டி மருந்து. இந்த மருந்தின் உபயோகம் போதையூட்டுவதால், இதை உபயோகிப்பது பழக்கமாகி விடும் வாய்ப்புள்ளதால், அதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். தூக்கிகள் (uppers), விரைவிகள் (speed) என்று பல்வேறு வழக்கு மொழிகளில் இந்த மருந்து வகைகள் கிடைக்கின்றன.
பார்க்க: Speed - தற்காலிகமாக மூளையைச் சுறுசுறுப்பாக்கி, களைப்பைப் போக்கும் மருந்து - மூளையின் புறப்பகுதிகளைத் தூண்டி தற்காலிக விழிப்பு நிலையையும், பரவசநிலையையும், நன்னிலை உணர்வையும் தூண்டும் ஒரு மருந்துப்பொருள். சோர்வைப் போக்கவும், குழந்தைகளிடம் உள்ள படபடப்புத் தன்மையை மாற்றவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது. மனவெழுச்சித் தூண்டிகள் என்றும், துருதிகள் என்றும் அழைக்கப்படும் இந்த மருந்தை நீண்ட நாள் பயன்படுத்தும்போது, அந்த மருந்தை உடல் படிப்படியாக ஏற்றுக்கொண்டு, இயல்பான மனவெழுச்சிக்குக் கூட அதிக அளவு மருந்து தேவைப்படும் நிலையை உருவாக்கும். இதனால் மிகு சோர்வும், மாரடைப்பும், மனச்சிதைவு நோயும் உண்டாகும். மரணம் கூட ஏற்படலாம்.

English

Psychoactive substances that produce in the user mild to intense feelings of euphoria and states of alertness, heightened awareness, and relief from feelings of sleepiness or tiredness. These substances tend to be habituating and addictive and often have serious side effects. Drug abusers know forms of such substances as "uppers" and "speed".