stimulus

தூண்டுகோல், புறத்தூண்டுதல், புறத்தூண்டுதல் தரும் பொருள், கிளர்வு, உந்தல்

தமிழ் விளக்கம்

ஒரு மனிதன் புறத்தே நிகழும் நிகழ்வை உணரும் விதம். அந்த உணர்தல் பகுத்தறிவைத் தூண்டுவதாகவோ, ஏதாவதொரு உணர்வை வெளிப்படுத்துவதாகவோ, உணர்வை வலுவூட்டுவதாகவோ, உணர்வைக் கட்டுப்படுத்துவதாகவோ, அந்தத் தூண்டாலுக்கு எந்த எதிர்வினையுமாற்றாமல் நடுநிலை வகிப்பதாகவோ இருக்கலாம்.
பார்க்க: Response - மறுமொழி, திடீர்விடை, பதில்வாசகம், எதிர்ச்செயல், பதில்குறிப்பு, உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு, ஏற்புத் தன்மை, பதில் உணர்வு, பிரதிபலிப்பு - ஒரு தூண்டுதலுக்குச் சட்டென்று தோன்றும் எதிர்வினை. (எ.கா. முழங்காலுதறுதல், எச்சில் சுரத்தல் மற்றும் ஏதாவதொரு விசையை அழுத்துதல்). தன்னுடைய உதவிகோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்படும்போது, சமூகப்பணியாளர் மீது வாடிக்கையாளருக்கு ஏற்படும் கோபமும், மனைவியைச் சமாதானப்படுத்தக் கணவர் வாங்கி வரும் பூங்கொத்தும் உதாரணங்களாகும்.

English

Any event in the environment that is perceived by the individual. A stimulus may be discriminative, eliciting, reinforcing, punishing, or neutral. See also response.