stimulus
புறத்தூண்டுதலை சீர்தூக்கிப் பார்த்தல், புறத்தூண்டல்களின் வித்தியாசமறிதல்
தமிழ் விளக்கம்
முன்னிகழ்ந்த ஒரு தூண்டலுக்கு எதிர்வினையாற்றியது போலல்லாமல், அந்தத் தூண்டல் மறுபடியும் நிகழும் போது அதே மாதிரி எதிர்வினையாற்றாமல் இருப்பது. அதாவது தூண்டல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பது. கம்புடன் வந்த ஒருவர் படுத்திருக்கும் நாயை அடிக்கும் போது, அந்த நாய் சத்தமிட்டுக்கொண்டு ஒடிவிடும். இது அடித்ததால் நாய் காட்டிய எதிர்வினை. அதே மாதிரி கம்புடன் யார் வந்தாலும் தான் அடிபடலாம் என்று கருதி நாய் ஒடுவது மனிதர்கள் மற்றும் அவர்கள் கையில் வைத்திருக்கும் கம்பு மீதான தூண்டல் பொதுவாக்கம் அல்லது தூண்டல் பொதுமைப்பாடு (stimulus generalization). அது மாதிரியல்லாமல் கம்புடன் வருபவரைப் பார்க்கும் போதெல்லாம் ஒடாமல், வரும் மனிதரின் போக்கறிந்து எதிர்வினையாற்றுவது. இது சமூகக் கற்றல் கோட்பாட்டிலும், தத்துவார்த்த ரீதியாகவும் மிக முக்கியமானது. கடந்து சென்ற அனுபவங்கள் நாம் மறுவினையை கட்டுப்படுத்தலாகாது. ஒவ்வொரு அனுபவத்தையும், தூண்டலையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
English
discrimination In social learning theory, the phenomenon in which the subject does not respond to a stimulus even though it is similar to one that had previously evoked a response.