stimulus generalization

தூண்டல் பொதுமையாக்கம்

தமிழ் விளக்கம்

ஒரு நபர் அல்லது உயிரனம் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு இயல்பாக மறுவினையாற்றுவது. ஒரு தூண்டலுக்கு ஒரே மாதிரி எதிர்வினையாற்றுவது. முன்னிகழ்ந்த ஒரு தூண்டலுக்கு எதிர்வினையாற்றியது போல, அந்தத் தூண்டல் மறுபடியும் நிகழும் போது, அதன் தன்மை வேறுபட்டிருந்தாலும், முன்னர் எதிர்வினையாற்றியது மாதிரி எதிர்வினையாற்றும் போக்கு. கம்புடன் வந்த ஒருவர் படுத்திருக்கும் நாயை அடிக்கும் போது, அந்த நாய் சத்தமிட்டுக்கொண்டு ஒடிவிடும். இது அடித்ததால் நாய் காட்டிய எதிர்வினை. அதே மாதிரி கம்புடன் யார் வந்தாலும் தான் அடிபடலாம் என்று கருதி நாய் ஒடுவது மனிதர்கள் மற்றும் அவர்கள் கையில் வைத்திருக்கும் கம்பு மீதான தூண்டல் பொதுவாக்கம் அல்லது தூண்டல் பொதுமைப்பாடு (stimulus generalization). இது தூண்டலைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு (stimulus discrimination) எதிரானது. இது சமூகக் கற்றல் கோட்பாட்டிலும், சந்தைப்படுத்தலிலும், தத்துவார்த்த ரீதியாகவும் மிக முக்கியமான கருத்தாக்கம். தூண்டல் பொதுமையாக்கததை வைத்தே பெரும்பாலான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

English

The ability of a subject to respond to one stimulus in the same way he or she responded to another, similar stimulus; the opposite of stimulus discrimination.