stolen children
திருடப்பட்ட குழந்தைகள்
தமிழ் விளக்கம்
விவாகரத்திற்குப் பிறகு, சட்டபூர்வமாகக் குழந்தையைப் பராமரிக்க நீதிமன்ற உத்தரவு பெற்ற பெற்றோரிடமிருந்தோ, பாதுகாவலரிடமிருந்தோ, பராமரிப்பு உரிமை மறுக்கப்பட்ட பெற்றோர் குழந்தையைத் திருடிச் செல்வது.
பார்க்க: Chils Snatching - குழந்தையைக் கடத்துதல், பிள்ளை பிடித்தல், பாதுகாவலரிடமிருந்து குழந்தையை சட்டவிரோதமாகப் பறித்தல் - குழந்தையின் பெற்றோரிடமிருந்தோ, சட்டபூர்வமான பாதுகாவலரிடமிருந்தோ, சட்டத்திற்குப் புறம்பான முறையில் தூக்கிச் செல்லுதல். இது இரண்டு வகைகளில் நடைபெறுகின்றது. 1. குடும்ப உறுப்பினர்களாலே செய்யப்படுவது. பிரிந்து விட்ட பெற்றோர்களில் ஒருவரோ, அவர்களின் உறவினரோ, குழந்தையைப் பராமரிக்க நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைக்காமல் மறுப்பது. குழந்தையைப் பார்க்கவிடாமல் மறைத்து வைப்பது 2. குடும்பத்தைச் சேராத அந்நியர் குழந்தையைத் தானே வளர்ப்பதற்காகவோ, பிறரிடம் விற்பதற்காகவோ, வேறு தீய நோக்கங்களுக்காகவோ (பெற்றோரை மிரட்டிப் பணம் பறிக்கவோ, கொத்தடிமையாக பயன்படுத்திக்கொள்ளவோ, பாலிச்சைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளவோ, உறுப்பு மாற்று வர்த்தகத்தில் ஈடுபடவோ) குழந்தையைக் கடத்துதல்.

English
Youths who have been abducted from the legal custodial parent, usually by the other parent after a divorce and loss of custody. See also child snatching.