stranger anxiety
அன்னியரச்சம், அசலரச்சம், அன்னியர்களிடம் / அறிமுகமில்லாதவர்களிடம் / அயலார்களுடன் ஏற்படும் பதட்டம், அறிமுகமில்லாதவர்களுடன் இருக்க நேரும் போது உணரும் சங்கடம்
தமிழ் விளக்கம்
அவ்வளவாக அறிமுகமில்லாத / பரிச்சயமில்லாதவர்களுடன் இருக்க நேரிடும் போது, குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் பதட்ட உணர்வு.
பார்க்க: separation anxiety - பிரிவுப் பதைப்பு, எக்கத் தனிமை / ஏக்கப் பிரிவு - தன்னுடைய முக்கியப் பராமரிப்பாளர் (குறிப்பாக தாய்) அருகில் இல்லாதபோது அந்தத் தனிமை அல்லது பிரிவால் குழந்தைகளுக்கு ஏற்படும் பயம் மற்றும் பதட்டம். குழந்தை வளர வளர இப்பதட்டம் குறையும் அல்லது முழுதுமாக மறையும். கடுமையாக மன அழுத்ததிற்கு உள்ளாகும் போதோ அல்லது வாழ்க்கைப் பருவ மாற்றங்களின் (கல்லூரிக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் போது, திருமணமாகிப் பெற்றோரைப் பிரியும் போது) போதோ இப்பதட்டம் மீண்டும் தலைதூக்கலாம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல வயதானவர்களுக்கும் கூட ஏக்கத் தனிமை ஏற்படுவதுண்டு.

English
Fear or apprehension in the presence of unfamiliar people, most common among very young children. See also separation anxiety.