strategic family therapy
பிரச்சனையின் மூலத்தைத் தீர்க்கும் குடும்பச் சிகிச்சை, உத்திசார் குடும்ப சிகிச்சை
தமிழ் விளக்கம்
ஒரு குடும்பத்தில் பரஸ்பர எதிர்வினையற்றலால் ஏற்படும் சங்கிலித் தொடர் பிரச்சனைகளைக் கண்டறிந்து, அதன் மூலகாரணத்தைக் களையும் குடும்பச் சிகிச்சை அணுகுமுறை. இச்சிகிச்சை முறையில் குடும்பச் சிகிச்சையாளர் மூலப் பிரச்சனைகளை இனங்கண்டு, அதைச் சரிசெய்ய ஒட்டுமொத்த குடும்பத் தொடர்பாடல்களையும் மாற்றியமைக்க முயல்வார்.
பார்க்க: Family Therapy - குடும்பச் சிகிச்சை - ஒரு குடும்பத்திலுள்ள உறுப்பினர்களிடையுள்ள பரஸ்பரத் தொடர்பாடலையும், உறவாடலையும் மேம்படுத்த, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்குமாறு வடிவமைக்கப்பட்ட உளவியல் சிகிச்சை முறை. இது குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் தொடர்புகளைப் பரிசீலித்து, பரஸ்பர மற்றும் ஏற்றெதிர் (reciprocal obligations) கடமைகளை விளக்கி, குடும்ப உறுப்பினர்களுக்குள் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க (நிலைமைக்குத் தக்கபடி வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய), நடத்தைப் போக்குகளை ஊக்குவிக்கின்றது. பிரச்சனைக்கான பின்னணிக் காரணத்தைச் (குடும்ப வரலாறு) முழுக்கச் சார்ந்திராமல், உறுப்பினர்கள் சொன்னதையும், சொல்லாமல் விட்டதையும், சொல்லாமல் மறைத்ததையும் கவனத்துடன் ஆராய்ந்து, 'இங்கே இப்பொழுது' என்ன தேவைப்படுகிறது என்பதையறிந்து செய்யப்படும் சிகிச்சை. சமூகஉளவியல், நடத்தையியல், அமைப்பியல் கண்ணோட்டங்களின்படி சிகிச்சை முறைகளும் வேறுபடுகின்றன. சில செல்வாக்குமிக்க குடும்பச் சிகிச்சையாளர்கள் - சால்வடார் மினிசின் (கட்டமைப்பு குடும்பச் சிகிச்சை), ஜே ஹேலி (மூலோபாயக் குடும்பச் சிகிச்சை), வர்ஜினியா சதிர் மற்றும் பாலோ ஆல்டோ குழு, முர்ரே போவன், கார்ல் விட்டேகர், ஹென்றி டிக்ஸ், மாரா செல்விணி, மற்றும் பெக்கி பாப் போன்றவர்கள்.

English
The orientation and procedure used by some family therapists to help families and their members discontinue reciprocal interactions in which recurring patterns of symptomatic behavior occur. The therapist designs an intervention to resolve specific problems, the resolution of which will require the family system to modify all other interactions.