strategic marketing
சந்தைப்படுத்தல் வியூகங்கள், விவேகமாக சந்தைப்படுத்தல், சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்கள்
தமிழ் விளக்கம்
குறிப்பிட்ட இலக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு பொருட்களையும், சேவைகளையும் உருவாக்குதல். பொருள் அல்லது சேவையை 'இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று யோசித்து ஆரம்பிக்கும் நடவடிக்கையிலிருந்து அதை இலாபகரமாகத் தயாரித்து, சந்தைக்குக் கொண்டுசென்று நுகர்வோருக்கு அளிப்பதை சந்தைப்படுத்தல் எனலாம். இதில் நுகர்வோர் இலக்கு என்றாலும், அப்பொருளில் முதலீடு செய்பவர்கள், அப்பொருளைப் பொருளாக வடிவமைப்பவர்களின் தேவையும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன. சந்தைப்படுத்தல் வியூகத்தில், பொருளோடு, சேவையோடு சம்மந்தப்பட்ட மக்கள் (முதலீடு செய்பவர்கள், நுகர்வோர் மற்றும் விற்பனையாளர், பொருளைத் தயாரிப்பவர்), அவர்களின் உளவியல், பொருளின் விலை, அந்தப் பொருளைப் பிறவற்றோடு ஒப்பிடத்தக்க அளவில் வைத்தல், விற்பனை உத்திகள், பொருளைப் பயன்படுத்துவதற்கான தேவையைத் தூண்டல் போன்ற பல விசயங்களில் ஆய்வையும், தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தலும் அடங்கியிருக்கும்.
English
The development of a product or service that serves the interests of specific publics. These publics include input (resource suppliers and funders), output (clients and other beneficiaries), and throughput (paid staff and volunteers who are charged with turning resources, funds, and concepts into products or services). Strategic marketing uses technical means to segment the public geographically, demographically, functionally, and psychologically to define an agency's or program's niche or market. It also involves pricing, placing, and promotions to regulate demand for a specific product or service.