strategic philanthropy
விவேகமுள்ள மனிதாபிமானம்
தமிழ் விளக்கம்
ஒரு தொழிலகமோ அல்லது வணிக நிறுவனமோ தன்னுடைய நிறுவன நலன்களுக்குப் பயன்படும் பயனாளிகளுக்குச் சேவை புரிய நிதி உதவி வழங்கல். எடுத்துக்காட்டாக ஒரு மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனம் பொதுவாக சேவை புரிவதற்குப் பதிலாக, ஏழை மாணவர்களுக்கு இலவசக் கணனிப் பயிற்சி அளிப்பதன் மூலம், தன்னுடைய மென்பொருளை அதிகமானவர்கள் பயன்படுத்துமாறு வியூகம் வகுப்பது. ஒரு உற்பத்தித் தொழில் நிறுவனம், பொதுச் சேவைகள் வழங்குவதைவிட, தன்னுடைய தொழிலகத்திற்குப் பணிபுரியத் தேவையான திறன் கல்வியை இலவசமாக ஏழை மாணவர்களுக்கு வழங்குவது.
English
Contributions made by corporations to serve the interests of the company as well as the beneficiaries. For example, a software maker donates computer programs to schools so the students learn how to use that company's products, or a manufacturer reduces charitable contributions for general education and uses the money for job training for prospective employees.