strategic planning

விவேகத்துடன் திட்டமிடல்

தமிழ் விளக்கம்

திட்டமிடல் என்ற பதமானது Prevoyance என்ற பிரான்ஸிய பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் முன்னோக்கிப் பார்த்தல் (Looking Ahead) என்பதாகும். இன்னொரு வகையில் கூறின் திட்டமிடல் என்பது செயல்கள் அல்லது நடத்தைகளை மேற்கொள்வதற்குரிய தயார் நிலை எனலாம். பொது நிர்வாகவியலில் ஒழுங்கமைப்பு, ஆட்சேர்ப்பு போன்ற யாவும் திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்படுவதினால்; இதனை எதிர்காலச் செயலுக்குத் தற்போது கையிருப்பிலுள்ள மக்கள் சக்தி, மூலப் பொருட்கள் என்பவற்றைச் சிக்கனமாகவும், திறமையாகவும் பயன்படுத்திப் பூரணத்துவம் பெறுவதற்கு உதவி புரியும் நிகழ்ச்சி நிரல் எனவும் கூறிக் கொள்ளலாம்.
'திட்டமிடத் தவறுபவர்கள் தோல்வியடையத் திட்டமிடுகிறார்கள்.' (If you fail to plan, you are planning to fail) என்பது அனுபவ ஞானம். திட்டமிடாத செயல்பாடு குழப்பத்தை விளைவிக்கும். நமக்கும் பிறருக்கும் மன உளைச்சலைத் தரும் போன்ற கூற்றுகள் திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.. திட்டமிடலில் ஒரு நாளைக்கான திட்டமிடலில் தொடங்கி, நீண்ட காலத்திற்கான, பணியை, காலத்தை, பணியாளர்களை, நிதியை அடிப்படையாக வைத்து திட்டமிடல் என்று பல முறைகள் கையாளப்படுகின்றன. சமூக அமைப்பையே மாற்றியமைக்கத் திட்டமிடல். என அனைத்துச் செயல்களுக்கும் திட்டமிடல் மிக அவசியம். எந்தத் திட்டமிடலும் இல்லாமல் செயலில் இறங்கினால் கால விரையம் ஏற்படும். ‘முன்னரே ஒப்புக் கொண்ட ஒரு கொள்கையை நிறைவேற்றவும், செயற்படுத்தவும் எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகளே திட்டமிடலாகும்’ (எல்.டி. வைட் -L. D. White) என்பர். விவேகத்துடன் திட்டமிடல் என்பது கீழ்க்கண்ட கூறுகளைக் கொண்டிருக்கும். 1. கொள்கைகளை முடிவு செய்தல் வேண்டும் 2. கொள்கைகள் குறித்துத் தகவல்களை திரட்டி ஆய்வு செய்து அது தொடர்பாக எழும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் 3. பின்னர் அப்பிரச்சினைகள் குறித்து எழும் மாற்று விளக்கங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் 4. மாற்று விளக்கங்களில் சிறப்பானதாகத் தோன்றுவதை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.

English

The process of formally or implicitly defining long-term goals and the alternative means toward their accomplishment. The goals are defined by specifying the target of intervention, auspices, value implications, feasibility, and interrelationships among various components of the social system. The goals thus established provide guidelines for looking at alternative means of achieving desired ends, which can often result in major modifications of existing programs and services.