street gangs

தெருக் கும்பல்கள், தெரு தாதாக்கள்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும், தங்களுக்கென தலைமையையும், பிறரிடமிருந்து பிரித்தறியத்தக்க அடையாளங்களையும் கொண்ட, எப்பொழுதும் கும்பலாக / குழுவாகத் திரிந்து கொண்டிருக்கும், ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களாகவோ, நெருங்கிய நண்பர்களாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களாகவோ, சமூக விரோதச் செயல்களில், வன்முறையில் ஆர்வம் கொண்ட, ஈடுபடுகின்ற, இடம்சார்ந்து ஆதிக்கம் செலுத்தும் கும்பல்களைத் தெருக்கும்பல்கள் அல்லது தாதாக்கள் எனலாம். இவர்கள் குண்டர் என்றும் அழைக்கப்படுவார்கள். 2014 ஆம் ஆண்டு அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பின் (Federal Bureau of Investigation) அறிக்கையின்படி, அமெரிக்காவில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேலான தாதாக் கும்பல்கள் இருக்கின்றன. இவைகளில் தெருக்கும்பல்கள், மோட்டார் சைக்கிள் கும்பல்கள், சிறைக்கும்பல்கள், குற்றவாளிக் கும்பல்கள் என்று பல வகையுண்டு. இந்தக் குழுக்களில் கருப்பினத்தவர் குழுக்கள், ஹிஸ்பானிக் குழுக்கள், காக்காசீயர் குழுக்கள், தென்கிழக்காசியக் குழுக்கள் என்று இனம் சார்ந்த கும்பல்களுமுண்டு. இந்த குழுக்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் இக்ககும்பல்களைக் கட்டுப்படுத்த காவல் துறை ஏற்படுத்திய குழுக்களும் உண்டு.
பார்க்க: Skinheads - மொட்டைத் தலையர்கள் - மொட்டையடித்துக்கொண்டு, அதிகாரத்தை, அயல்நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோரை, வெள்ளையினத்தவர் அல்லாத பிற இனத்தவரை வெறுக்கின்ற, கும்பலாக, கோஷ்டியாக தெருவில் சுற்றித்திரியும் வெள்ளை இனப்பண்பாட்டின் துணைப்பண்பாட்டுக் (sub culture gangs) குழுவினரை / இனத்தவரைக் குறிக்கும் சொல். மொட்டைத்தலையர்கள், 1960 களில் நீளமாக முடிவளர்த்துத் திரிந்த பாப் கலாச்சாரத்தின் எதிர்ப்பாளர்களாக, தொழிலாளர் வர்க்க மதிப்பீடுகளை பிரதிபலித்தவர்கள். எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும், இனங்களிலும் மொட்டைத்தலையர்கள் என்ற துணைப்பண்பாட்டுக் குழுக்கள் உண்டு. இவர்கள் எல்லோரும் இன வெறுப்பாளர்களல்ல. வயதான மொட்டைத்தலையர்கள் பெரும்பாலும் இனம் அல்லது குழுப் பெருமித உணர்வுகொண்ட அமைப்புகளில் இணைந்துள்ளார்கள்.

English

Informal organizations comprised mostly of younger people who tend to have common antisocial values, community residence, race, and symbols that distinguish themselves from other gangs and nongang members. Some predominantly African American gangs include Crips and Bloods, Vice Lord Nation, Disciples, Folk Nation, and People Nation. Some predominantly Hispanic gangs include 18th Street Gang, Latin Kings, and Maniac Latin Disciples. Southeast Asian and Caucasian groups, such as skinheads, also have significant gang memberships in some communities. Organizations established especially to deal with gangs and their victims include Mothers Against Gangs, Mothers Against Violence, the Gang Violence Reduction Project of the California Youth Authority, and the Gang Prevention Through Targeted Outreach program of the Boys and Girls Clubs of America.