street kids
தெருவோரச் சிறார்கள்
தமிழ் விளக்கம்
தெருவோரச் சிறார்கள் என்னும் சொல், ஒரு நகரத்தின் தெருவில் வசிக்கும் குழந்தைகளையோ அல்லது சிறுவர்களையோ குறிக்கிறது. குடும்பத்தின் கவனிப்பும், பாதுகாப்பும் இச்சிறார்களுக்குக் கிடைப்பதில்லை. 5 முதல் 17 வயதுடைய இச்சிறுவர்களில் பெரும்பாலோனர் வீதியோரத்திலும், பாழடைந்த கட்டிடங்களிலும், பூங்காக்களிலும், பாதுகாப்பற்ற பொதுஇடங்களிலும் வசிக்கின்றனர். தெருவோரச் சிறார்களை வகைப்படுத்த முயல்வோர்கள் அனைவரும் முதலில் சந்திக்கும் சிக்கல் என்னவெனில், அச்சிறார்களை எத்தகைய பிரிவில் வகைப்படுத்துவது என்பதேயாகும். தெருவிலேயே பகல் நேரத்தைக் கழித்து விட்டுப் பின் பொறுப்பற்ற பெற்றோர்கள் / பெரியவர்களுடன் இரவில் தூங்கும் சிறார்கள் முதல் பெரியவர்களின் கவனிப்போ, அக்கறையோ இல்லாது நாள் முழுதும் தெருவோரங்களிலேயே வசிக்கும் சிறார்கள் வரை தெருவோரச் சிறார்கள் என்னும் சொல்லில் அடங்குகின்றனர். யூனிசெஃப் (Unicef) நிறுவனம் தெருவோரச் சிறார்களை இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கிறது. 1. பிச்சையெடுப்பது முதல் சிறு விற்பனை செய்வது போன்ற பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அந்நாளின் முடிவில் வீட்டிற்குச் சென்று, அன்றைய உழைப்பின் ஊதியத்தைக் குடும்பத்திற்குத் தரும் சிறார்கள். 2. உண்மையிலேயே தெருக்களில் வசிப்பவர்கள் அல்லது இயல்பான குடும்பச் சூழலில் வாழாதவர்கள். தெருவோரக் குழந்தைகளுக்கு அவர்களுடைய வீட்டை விட தெருக்களே உண்மையான வீடாக அமைகிறது. சரியான பாதுகாப்பும், மேற்பார்வையும் வழிகாட்டுதலும் இல்லாது அவர்கள் வாழ்கின்றனர். மனித உரிமைக் கண்காணிப்பு (Human Rights Watch) அமைப்பு, இந்தியாவில் ஏறத்தாழ 18 மில்லியன் சிறார்கள் தெருவோரங்களில் வசிக்கின்றனர், வேலை செய்கின்றனர் என்று கூறுகிறது. இச்சிறார்களில் பெரும்பான்மையோர், குற்றங்களிலும், பாலியல் தொழிலிலும், வன்முறையிலும், போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபடுவதாக அறியப்படுகிறது.
பார்க்க: Ribicoff children - ரிபிகாப் குழந்தைகள் - கனெக்டிகட் (Connecticut) மாநில ஆளுநராகவும், அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் நெருங்கிய நண்பரும், அவருடைய அமைச்சரைவில் சுகாதாரம், கல்வி, மற்றும் சமூகநலத்துறைச் செயலராகவும் பணியாற்றியவர் ரிபிகாப். 21 வயதிற்குக் குறைவான, யாரையும் சார்ந்திராமல், தனித்து வறுமையில் வாடும், தெருவோரத்தில் வாழும், சந்தேகத்திற்கிடமில்லாமல் உதவி தேவைப்படுபம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ உதவி, துணை வருமானத் திட்டம், உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கான தற்காலிக உதவி போன்ற திட்டங்களின் மூலம் உதவி செய்யும் முறையைக் கொண்டுவந்தார். இந்த வரையறைகளின்படி உதவி பெற்ற குழந்தைகள் அவருடைய பெயராலே ரிபிகாப் குழந்தைகள் என்றழைக்கப்பட்டனர்.

English
Adolescents in the 16-21 age range who live on or near the streets of urban areas in relative independence from their parental homes. Whereas younger boys and girls are usually considered to be runaways or abandoned or lost children, these adolescents constitute a large subpopulation whose existence is generally unrecognized. For example, they are not counted among homeless people in the United States. (The U.S. Bureau of the Census counts only people older than 21 as homeless.) See also Ribicoff children.