stress

அழுத்தம், நெருக்கடி, உளவழுத்தம், மன இறுக்கம், மனவுளைச்சல், உளைச்சல், அழுத்தவிசை, ஒலியழுத்தம், அயர்ச்சி, நலிவுறச்செய்தல், தளர்வுறச் செய்தல், சோர்வுறச்செய்தல்

தமிழ் விளக்கம்

மன அழுத்தம் என்பது மனிதன் அல்லது பிற உயிரினங்களில் உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு, சரியான முறையில் எதிர்ச்செயலைச் செய்யமுடியாத நிலை தோன்றுவதன் தொடர்விளைவு அல்லது பின்விளைவாகும். ஹான்ஸ் செலி (Hans Selye) என்ற அகச்சுரப்பியியாளர், உயிரனங்கள் எதிர்கொள்ளும் எந்த ஒரு தூண்டலுக்கும் அவைகள் ஆற்றும் எதிர்வினையையும், அந்த எதிர்வினையால், உடற்தொழிலியலில் ஏற்படும் பாதிப்புகளையும் குறிக்க, 1930 ஆம் ஆண்டில், இச்சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். மன அழுத்தத்தைத் தூண்டக்கூடியக் காரணியினால், மிதமான எரிச்சல் அல்லது கோபம் கொள்ளும் நிலை தொடங்கி, மிகவும் தீவிரமான, செயல்பட முடியாத நிலை வரையான பாதிப்பு ஏற்படுவதால், மன, உடலியக்கத்தில் செயல் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறினார். மன அழுத்தத்தின் விளைவாக உடல், மன, பழக்கவழக்கத்தில் மாற்றங்களை ஏற்படும். மன அழுத்தத்தின் விளைவாக எச்சரிக்கை உணர்வு அதிகரிக்கும். அதிரினலின் (adrenalin) சுரப்பு அதிகரிக்கும். சோர்வு, எளிதில் எரிச்சலடைதல், கோபமடைதல், தசைகளில் இறுக்கம், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை போன்றவற்றுடன், இதயத் துடிப்பு அதிகமாதல், இசைவற்று மூச்சு விடுதல், தலைவலி போன்ற சில உடலியங்கியல் அறிகுறிகளும் ஏற்படும். இதிலிருந்து விடுதலை பெற மனிதர்கள் உளப்பாதுகாப்புப் பொறிகளையோ அல்லது ஆக்கபூர்வாமான செயல்களையோ பயன்படுத்துவார்கள்.

English

Any influence that interferes with the normal functioning of an organism and produces some internal strain or tension. "Human psychological stress" refers to environmental demands or internal conflicts that produce anxiety. People tend to seek an escape from the source of these influences-stressors-through such means as a defense mechanism, avoidance of certain situations, phobia, somatization, rituals, or constructive physical activity.