stressful life events
இறுக்கமான வாழ்க்கை நிகழ்வுகள், அயர்ச்சி தரும் வாழ்க்கை நிகழ்வுகள்
தமிழ் விளக்கம்
ஒரு நபர் சமாளித்தே ஆகவேண்டுமென்றிருக்கின்ற நெருக்கடியான சந்தர்ப்பங்களில், அவருக்கு இயல்பாகக் கிடைக்கவேண்டிய ஆதரவு கிடைக்காத பட்சத்தில், அவருக்கு ஏற்படும் அனுபவத்தை, இறுக்கமான / மனவுளைச்சல் தரும் / அயர்ச்சி தரும் வாழ்க்கை நிகழ்வுகள் எனலாம். பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தை போன்ற நெருக்கமானவர்களின் மரணம், எதிர்பாராமல் ஏற்படும் வேலை அல்லது பொருளாதார இழப்பு, விவாகரத்து, குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் உடல்நலமின்மை, புதிய இடத்திற்குக் குடிபெயர்தல் போன்ற நிகழ்வுகளை மனவுளைச்சல் தரும் வாழ்க்கை நிகழ்வுகள் எனலாம்.
English
Crisis occurrences experienced by an individual that require coping responses but at a time when familiar sources of support or resources are no longer available. Major stressful life events include the death of a spouse or child, loss of a job, divorce, disease of a family member, and moving to a new neighborhood.