stroke
பக்கவாதம், பாரிசவாதம்
தமிழ் விளக்கம்
பக்கவாதம் அல்லது பாரிசவாதம் (stroke) என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளை மிகவிரைவாகச் செயலிழப்பதைக் குறிக்கும். குருதி உறைதல் (blood clotting), குழலியக்குருதியுறைமை (Thrombosis) போன்றவற்றாலோ அல்லது குருதிப்பெருக்கினாலோ (blood bleeding) குருதி வழங்கல் குறையும்போது பக்கவாதம் நிகழக்கூடும். அதாவது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்தாலோ, அந்த ரத்தக் குழாய்கள் வெடித்தாலோ, மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைந்து மூளையின் உயிரணுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதினால், ப்ரெயின் அட்டாக் எனப்படும் பக்கவாதம் ஏற்படுவதால், மூளை செயலிழந்து, உடலின் ஒரு பக்கமுள்ள உறுப்புகளோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்களோ இயங்க முடியாமல் போகிறது. வாய்கோணுதல், வார்த்தைகள் குளறுதல், நடையில் தள்ளாட்டம், தடுமாற்றம், கை-கால் தூக்கமுடியாத நிலை, கை-கால்கள் உணர்ச்சியற்று மரத்துப் போதல், பேசமுடியாமை, மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியாமை, சடுதியாக ஏற்படும் பார்வைக் கோளாறு அல்லது முற்றாகப் பார்வைத் திறனை இழத்தல் போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகள். பக்கவாதத்தினால் நிரந்தரமான நரம்புச் சிதைவு ஏற்படுவதுடன் இறப்பும் நிகழலாம். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பெரியவர்களுக்கு ஏற்படும் ஊனத்துக்கான முன்னணிக் காரணம் பக்கவாதமேயாகும். அமெரிக்காவில் இறப்புக்கான காரணிகளில் இது மாரடைப்புக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவிலும் இறப்புக்கான காரணிகளுள் இது இரண்டாவதாக இருப்பதுடன், விரைவில் இது முதல் இடத்துக்கு வரக்கூடும் எனக் கருதப்படுகிறது. இதைப் பெருமூளைக்கு இரத்தம் எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் விபத்து (cerebrovascular accident) என்றும் சொல்வர்.
English
A sudden interruption or blockage of the flow of blood to the brain, usually caused by the formation of a blood clot in the blood vessel. The resulting manifestations may include paralysis of certain parts of the body, speech and language deficits, sensory loss, cognitive and communicative disturbances, convulsions, and coma. Stroke survivors vary in their recovery progress; approximately 50 percent retain some permanent disability, such as speech or motor coordination problems. Recurrence is frequent and often fatal. The term is also known as cerebrovascular accident (CVA).