structural approach

(சமூக) கட்டமைப்பு அணுகுமுறை

தமிழ் விளக்கம்

எல்லா மானுடப் பிரச்சனைகளுக்கும் சமூகக் கட்டமைப்பே காரணம் என்றும், மானுட வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும், மானுட உறவுகள் செம்மைப்படவும், சமூகச் சூழலை, சமூகக் கட்டமைப்பை மாற்றியமைப்பதைத்தான் முதன்மையான குறிக்கோளாகக் கொள்ள வேண்டுமென்றும், சமூகக் கட்டமைப்பை மாற்றுவதன் மூலமும், புதிதாக உருவாக்குவதன் மூலமும், அல்லது இருக்கின்ற கட்டமைப்பைத் திறனுடன் பயன்படுத்துவதன் மூலமும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று கேல் ஜி வுட் மற்றும் ரூத் ஆர் மிடில்மேன் (Gale G. Wood and Ruth R. Middleman) சொல்லிய அணுகுமுறை.

English

A social work model developed by Gale G. Wood and Ruth R. Middleman (The Structural Approach to Direct Practice in Social Work, New York: Columbia University Press, 1989) in which the social environment is the primary target of change, and the intervention is to improve the quality of the relationship between people and their social environment by changing, creating, or using existing social structures.