structural family therapy

குடும்ப அமைப்புச் சிகிச்சை

தமிழ் விளக்கம்

ஒரு குடும்பத்தில் பிரச்சனையென்பது அக்குடும்பத்திலுள்ள தனிமனிதர்களிடமல்ல, அக்குடும்பத்தின் கட்டமைப்பிலிருந்து உருவாவது என்று கூறிய சல்வடார் முனூசின் அணுகுமுறை. பிரச்சனையுள்ள குடும்பத்திற்கு உதவுவதென்பது, அக்குடும்பம் எப்படிக் குடும்ப நடைமுறைகளை வடிவமைத்தது, பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்தது, ஒருவருக்கொருவரான உறவுகளை வகுத்துக்கொண்டது, குடும்பத் துணை அமைப்புக்களுக்குள் எல்லைக்கோடுகளை வகுத்துக்கொண்டது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலமே சாத்தியமாவதால், குடும்பக் கட்டமைப்பை புரிந்துகொள்வது குடும்பச் சிகிச்சையில் முக்கியமானது என்று வலியுறுத்திய அணுகுமுறை.

English

An orientation and procedure in family therapy based on identifying and changing maladaptive arrangements, interactions, and the internal organization of subsystems and boundaries of a family. Structural family therapy was developed in the 1970s primarily by Salvador Minuchin and emphasizes helping families understand how they have developed rules and roles for their members and between the family as a unit and outsiders.