structural social change
சமூகக் கட்டமைப்பு மாற்றம்
தமிழ் விளக்கம்
புரட்சி அல்லது சமூகக் கிளர்ச்சியின் மூலமோ, அடிப்படை அரசியல் மாற்றம் அல்லது கொந்தளிப்பினாலோ, இயற்கைப் பேரிடர் போன்ற சம்பவங்களாலோ ஒரு சமூகத்தின் மதிப்பீடுகளிலும், அமைப்புகளிலும் ஒப்பீட்டளவில் ஏற்படும் விரைவான மாற்றங்கள். இது படிப்படியாக ஏற்படுத்தப்படும் சமூக மாற்றங்களிலிருந்து வேறுபட்டது.
பார்க்க: incremental social change - படிப்படியான சமூக மாற்றம் - மக்களின் மாறிவரும் மதிப்பீடுகள், தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு சமூக நிறுவனங்கள் (உ.ம். குடும்பம், பள்ளி, மதம்) படிப்படியாகப் புதுச்சூழலை ஏற்றுக்கொண்டு (adaptation) சீரமைத்துக்கொள்ளுதல் (adjustment). சமூக நிறுவனங்கள் தங்களின் இருப்பையும், அடிப்படைத் தன்மையையும் தக்கவைத்துக்கொண்டு, மக்களின் தேவைகளுக்கு இடமளிக்கும் முகமாக தங்களின் குறிக்கோளையும் வழிமுறைகளையும் மாற்றிக்கொள்வது. இது (பாரம்பரிய நிறுவனங்களை உதாசீனப்படுத்தி விட்டுப் புது நிறுவனங்களை உருவாக்கும்) கட்டமைப்புச் சமூக மாற்றங்களிலிருந்து வேறுபட்டது.

English
Basic and relatively rapid changes in social institutions and social values, often brought about by revolution, great political upheaval, or natural disaster. This is the opposite of incremental social change.