structural unemployment
கட்டமைப்பு சார்ந்த வேலையின்மை
தமிழ் விளக்கம்
ஒரு நபர் வேலை செய்யத் தயாராகவும் விருப்பத்துடனும் இருந்தும், அவர் வேலைசெய்ய வாய்ப்புகளற்றிருக்கும் நிலையை வேலைவாய்ப்பின்மை எனலாம். வேலையின்மையை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். 1. காலச் சுழற்சி வேலையின்ன்மை, (cyclical), 2. பருவகால வேலைவாய்ப்பின்மை (seasonal) பருவநிலை மாற்றத்தால் சில செயல்களைச் செய்யமுடியாது போனாலோ அல்லது சில வேலைகளுக்குத் தேவையில்லாது போனாலோ இந்த வேலையின்மை உருவாகும். 3. பொருளாதார மந்தத்தால் / பொருளாதார அமைப்பால் வரும் வேலையின்ன்மை (Structural) 4. பிறழ்ச்சி வேலைவாய்ப்பின்மை ஒருவகை. ஒரு தொழிலாளி ஒருவேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறும் போது ஏற்படும் (Friction - ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது ஏற்படும் எதிர்ப்பு / உராய்வு / காலதாமதம்) பிறழ்ச்சி வேலையின்மை எனப்படுகிறது. அரசு தன்னுடைய கொள்கைகள் மூலம் தொழிற்சாலைகள் பரவலாக்க ஊக்கமளிக்காததாலும், சில தொழில்களுக்கு மட்டும் அரசு பாரபட்ச சலுகைகள் அளிப்பதாலும், வேலைவாய்ப்பைக் குறைக்கும் தொழில்நுட்பத்தைத் தடையின்றி பயன்படுத்த அனுமதிப்பதாலும், அதிக வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய தொழில்களை ஆரம்பிக்க அரசு ஆதரவளிக்காததாலும் எல்லாவற்றிற்கும் மேலாக வேலை தேடும் ஒருவர், வேலையாட்கள் தேவைப்படும் நிறுவனத்திற்கு உபயோகமுள்ள திறன்களைப் பெற்றிருக்காததாலும் போன்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து வேலையின்மை உருவாவதை கட்டமைப்பு சார்ந்த வேலையின்மை என்கின்றனர்.
English
One of the four types of unemployment (including cyclical unemployment, seasonal unemployment, and frictional unemployment), caused by poor economic conditions in one industry or geographic area when employment elsewhere is good.