structured observation
கட்டமைக்கப்பட்ட கவனிப்பு, கடிவாளப் பார்வை
தமிழ் விளக்கம்
ஒரு சில சமூக நிகழ்வுகளின் போக்கை மட்டும், அதை எந்தக் கோணத்தில், எப்படி கவனிக்கவேண்டும் என்று தீர்மானித்து, வேறிதிலும் கவனத்தைச் சிதறவிடாமல், ஆய்வு நோக்கோடு முறையாகக் கவனிக்கும் ஆய்வுமுறையைக் கட்டமைக்கப்பட்ட பார்வையிடல் எனலாம். இதைக் குறையறியும் சோதனையினாலோ, களத்திலோ, அதற்கு முன்னாள் செய்யப்பட்ட ஆய்வுகளிலிருந்தோ, அனுமானங்களிலிருந்தோ தயாரிக்கப்பட்ட சரிபார்ப்புப் பட்டியலைக் கொண்டு செய்யலாம்.
English
In social work research, the practice of systematically witnessing those aspects of a social phenomenon that fit a predetermined plan. It may take place in a clinical setting, laboratory experiment, or in the field, and the observer usually has a checklist of categories to note. The categories were developed by the investigator based on hypotheses or findings from previous research.