student aid programs

மாணவர் உதவித் திட்டங்கள்

தமிழ் விளக்கம்

கல்லூரி மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்குக் கடனாகவோ, மானியமாகவோ வழங்கப்படும் மாணவர் நிதி உதவித் திட்டங்கள். இந்த நிதி உதவியில் அமெரிக்க மைய மற்றும் மாநில அரசுகளின் கடன் மற்றும் மானிய உதவிகள், தனியார் அறக்கட்டளைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் கல்வித் உதவித் தொகை போன்றவை அடங்கும். அமெரிக்க மைய அரசு மாணவர்களின் தேவை மற்றும் அவரின் குடும்பப் பங்களிப்பைக் கணக்கிட்டு வழங்கும் பெல் மானியங்கள் (Pell Grant), மாணவர்களுக்காகக் குறைந்த வட்டியில் வழங்கப்படும் கடனுதவி (National Direct Student Loans), தேவையினடிப்படையில் வழங்கப்படும் கல்வி வாய்ப்பிற்கான மானிய உதவி (Supplemental Educational Opportunity Grants), மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் வங்கிகளுக்கு அரசு அளிக்கும் மறுஉத்தரவாதத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கச் செலவிடும் ஊதியத்தில் சரிபாதி வழங்கும் அரசு மானியம் போன்ற திட்டங்களின் மூலமாக அமெரிக்கக் கல்லூரி மாணவர்கள் கல்வி உதவி பெறுகிறார்கள்.

English

Financial assistance to people attending colleges or other educational institutions, mostly through grants or loans. Sources of funds are privately funded scholarships, foundation grants, and state and federal grant and loan programs. The major federal programs include Pell Grants (based on a formula of student need and expected family contribution); National Direct Student Loans (low-interest loans to needy students); Supplemental Educational Opportunity Grants (based on need); Guaranteed Student Loans (the government guarantees repayment to banks that lend money to students); and the College Work Study Program, which provides matching funds to colleges to hire students on campus.