subjugated knowledge
தன்வசமாக்கப்பட்ட அறிவு, பட்டறிவு, சுதேசியறிவு
தமிழ் விளக்கம்
மக்களின் இயல்பான ஞானமும், பட்டறிவும் எப்படி சம்பிரதாயக் கல்விமுறையால் உதாசீனப்படுத்தப்பட்டு அழிக்கப்படுகிறது என்பதை விளக்க மிஷேல் ஃபூக்கோ (Michel Foucault) என்ற பிரெஞ்சுத் தத்துவ ஞானியால் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல். அறிவைக் கட்டமைக்கும் இடங்களென்றும் (கல்வி நிலையங்கள்), அறிவைப் பெறும் முறைகளென்றும் (அறிவியல் முறை) ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளைக் கடந்து, நிபுணர்கள் என்று அங்கீகரிக்கபடாத சாதாரண மக்கள் சுயமாகப் பெற்ற புரிதலும் ஞானமும். இந்தப் புரிதல் கல்வி நிலையங்கள், பெரும்பாலும் நிபுணர்களைச் சாராமல் உருவாவதால் போதிய கவனம் பெருவதில்லை. மாறாக ஒதுக்கி வைக்கப்படுகிறது. நிபுணர்களின் அனுமானங்கள், உள்ளுணர்வால், அனுபவத்தால் பெற்ற அடித்தட்டு மக்களியக்கங்களின் ஞானத்தின் முன் செல்லாததாகும் போது, மக்களறிவு அங்கே எழுச்சி கொள்ளும் என்று சமூகப்பணிக் கல்வியாளரான ஆன் ஹார்ட்மான் (Ann Hartman) தன்னுடைய சுதேசியறிவைத் தேடி என்ற கட்டுயில் குறிப்பிடுகிறார்.
English
The range of information and understanding that is acquired outside the established knowledge-building procedures (scientific method) and is possessed indigenously by people who are not considered "experts". Because this type of knowledge comes from and is maintained outside the academic or professional establishment, it is given little serious attention, that is, it is subjugated. According to Ann Hartman ("In Search of Subjugated Knowledge", Social Work, 37 [November 1992], pp. 483-484), when the privileged hypotheses of the experts are challenged by grassroots movements of people who have learned other truths, there is a valuable "insurrection of subjugated knowledge".