sublimation
உணர்ச்சி மடைமாற்றம், உன்னதமாக்கல், தன்னையறியாமலேயே உயர்குறிக்கோள்களை அடைய விரும்புதல், .உயர்குறிக்கோள்களை மாற்றாக்கிக் கொள்ளல்
தமிழ் விளக்கம்
உள இயக்கக் கோட்பாட்டின்படி, மன அழுத்ததிலிருந்து விடுபடக் கையாளப்படும் உளப்பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்று. எந்த இச்சைகள் சமூகத்தால் ஏற்புடையதென்று கருதப்படுகிறதோ, எந்த இச்சைகளை இயல்பாக வெளிப்படுத்தினால் தவறாகக் கருதப்படுவோமோ என்று நினைக்கும் பட்சத்தில், அதை மாற்றி, சமூகம் ஏற்றுக்கொள்ளத்தக்க வடிவில், தவறாக எண்ணப்படாத அளவில், அந்த இச்சையை வேறொரு வடிவத்தில் வெளிப்படுத்துவது.
English
In psychodynamic theory, a defense mechanism in which those desires and instinctive drives that are consciously intolerable and cannot be directly realized are diverted into creative activities that are acceptable to the individual and society.