subsidy
ஆதரவுத் தொகை, உதவித் தொகை; ஊக்குதவித் தொகை, ஊக்கத் தொகை / பொருளுதவி, ஊக்காதரவுத் தொகை, அரசு உதவித் தொகை, அரச உதவி, தொழில் அறத்துறைச் சார்பாக அரசின் பணவுதவி, சலுகையளிப்பு
தமிழ் விளக்கம்
subsidy என்ற வார்த்தை மானியம், சலுகை என்ற பொருள் தந்தாலும், இது பொதுவாக ஒரு அரசு சில செயல்களை ஊக்குவிக்கத் தனி மனிதர்களுக்கு, நிறுவனங்களுக்கு, தொழிலகங்களுக்கு அல்லது பிற அரசுகளுக்கு, துறைகளுக்கு வழங்கும் ஆதரவுத் தொகையையே குறிப்பாக உணர்த்தும். எ.கா. சமையல் எரிவாயு மானியம் (தனி நபர்களுக்கு), சந்தை விலையை விட குறைந்த விலையில் சேவை நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு வழங்கும் மூலப்பொருட்கள், வரிச் சலுகைகள், மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து சில திட்டங்களை அமல்படுத்தக் கொடுக்கும் நிதி உதவி போன்றவை இதிலடங்கும்.
English
Money or commodities granted by a government or other organization to another level of government, organization, industry, or individual. See also grants-in-aid and block grant.