subsistence economy
பிழைப்புமட்டப் பொருளாதாரம், தாக்குப் பிடிப்புப் பொருளாதாரம், பிழைப்பூதியப் பொருளாதாரம்
தமிழ் விளக்கம்
1.அடிப்படைத் தேவைகள் பூர்த்திக்காக வேளாண்மை, வேட்டையாடுதல், இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களைச் சேகரித்தல் போன்ற பிழைப்பிற்கான செயல்பாடுகளை முக்கியப் பொருளாதார நடைமுறையாகக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்பு. 2. சுய சார்புடைய பொருளாதாரம். பிழைப்பதற்கான பொருட்கள் மற்றும் சேவைகளில் ஈடுபடும் பொருளாதார அமைப்பு. கல்விக்கு, கலாச்சார மேம்பாட்டிற்கு, சேமிப்பிற்கென உபரி வருமானம் அதிகமில்லாத பொருளாதார அமைப்பு.
English
The economic system of a country or group that produces only the minimum amount of goods and services needed for survival, with few resources available for education, cultural advancement, or savings.