substance abuse

மட்டுமீறிய போதைப்பொருள் நுகர்வு, போதைப்பொருள் துஷ்பிரயோகம்

தமிழ் விளக்கம்

substance என்பதை தமிழில் இலாகிரி வஸ்துக்கள் எனலாம். இது மனதை அலைபாய வைக்கும், தள்ளாட்டத்தைத் தரும், போதை தரும் தன்மை கொண்டவை. போதைப் பொருள்களான மது, கஞ்சா, அபின், புகையிலை போன்ற பொருட்கள், போதை ஏற்றிக்கொள்வதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் மக்களால் பயன்படுத்தப் படுகின்றது. போதைப் பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் அதைப் பயன்படுத்துவது துஷ்பிரயோகமாகும். இந்தப் பழக்கத்தை விடமுடியாத அளவு சார்புத்தன்மை அதிகரிக்கும் போது, தனிமனிதன், குடும்பம், சமுதாயம் எனப் பல வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

English

A maladaptive pattern of using certain drugs, alcohol, medications, and toxins despite their adverse consequences. Substance abuse is considered less problematic than substance dependence in that tolerance and withdrawal symptoms have not yet occurred.