substance dependence

போதைப்பொருள் சார்புத் தன்மை

தமிழ் விளக்கம்

மது, மருந்துகள் மற்றும் பிற நச்சுப் பொருட்களைத் தொடர்ந்து உபயோகிப்பதால் மோசமான உடல், அறிவாற்றல் மற்றும் நடத்தை ரீதியான விளைவுகள் ஏற்பட்டிருந்தாலும், அந்தப் பழக்கத்தை விடமுடியாது அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதை போதை மருந்துச் சார்பு நிலை எனலாம். போதை தரும் பொருளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது, நாட்பட நாட்பட அதிக அளவு எடுத்துக்கொள்வது, அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட மனதளவில் நினைப்பது, போதைப் பழக்கத்தின் விளைவாக வேலை மற்றும் சமூகச் செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, போதைப்பழக்கத்தால் ஏற்படும் உடல், மன, சமூகப் பிரச்சனைகளை முழுதும் புரிந்திருப்பது போன்றவை ஒருவர் போதை மருந்துச் சார்பு நிலையை அடைந்து விட்டதற்கான அடையாளங்களாகும். போதை மருந்திற்கான தாங்கு சக்தி உடலில் அதிகரித்து, அதாவது அதிக அளவு எடுத்துக்கொண்டால்தான் போதையேறும் என்ற நிலைக்கோ அல்லது அதிலிருந்து விடுபட நினைக்கும்போது உடல் மற்றும் உளரீதியான நலமின்மை, வாழ்க்கை நலக்குறைவு, மன உளைச்சல், ஏற்படும் நிலையையோ அடையாதிருந்தால் அதை துஷ்பிரயோக நிலை எனலாம்.

English

Continued use; craving; and other cognitive, behavioral, and physiological symptoms that occur through the use of certain drugs, alcohol, medications, and toxins. Some of the symptoms include preoccupation about the substance; taking greater amounts than intended; persistent efforts to control its use; reducing occupational or social activities; and continued use despite recognizing that it is causing recurrent physical, psychological, or social problems. If tolerance or withdrawal symptoms have not yet occurred, the condition is known as substance abuse.