substance-use disorders

இலாகிரி வஸ்து / போதைப் பொருள் பயன்பாடு சார்ந்த சீர்குலைவுகள்

தமிழ் விளக்கம்

இலாகிரிப் பொருள் / போதை மருந்து துஷ்பிரயோகத்தாலோ, மதுப்பழக்கத்தாலோ, மருந்துகளாலோ அல்லது நச்சுபொருள்கள் உட்கொண்டாதாலோ ஏற்படும் விரும்பத்தகாத அறிகுறிகள் மற்றும் பக்கவிளைவுகள் இலாகிரி வஸ்து / போதைப் பொருள் பயன்பாடு சார்ந்த சீர்குலைவுகள் எனப்படுகிறது. மன நோய்களைக் கண்டறிய உதவும் புள்ளி விபரக் கையேடு, மது (அல்ஹககால்), ஆம்பிடாமைன் என்ற தற்காலிகமாக மூளையைச் சுறுசுறுப்பாக்கி, களைப்பைப் போக்கும் மருந்து, காபீன், கஞ்சா, கோகோயின் என்ற வலியுணர்ச்சியைப் போக்கும் மருந்து, ஹலுசினோஜென் (hallucinogen) என்ற பிரமையூட்டிகள், இன்கலேண்ட் (inhalent) என்ற மூச்சிழுத்தற்பொருள், நிகோடின் (nicotine) என்ற புகையிலை நச்சு, ஒபியம் என்ற வலிநிவாரணி, பென்சிசைக்கிளிடின் (phencyclidine) என்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட போதை தரும் இரசாயனப் பொருள், செடேடிவ்ஸ் (sedatives) என்ற துயிலூட்டிகள், பல போதை மருந்துப் பழக்கம், இன்னும் பல பொருட்களை போதைப்பொருட்களாக பட்டியலிட்டு வகைப்படுத்தியுள்ளன. இந்தப் பொருட்களை பயன்படுத்துவது பழக்கமாகும் போது, பல்வேறு வகையான உளப்பிணிகள் (psychotic disorder), பல்வேறு மன நிலைக்கோளாறுகள் (mood disorder), பல்வேறு பதட்டக்கோளாறுகள் (anxiety disorder) பாலியல் திறனிழப்பு (sexual dysfunction) மற்றும் தூக்கக் கோளாறுகள் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் சீர்குலைவுகள் எனப்படுகிறது.

English

A classification of disorders related to the taking in of a drug of abuse, alcohol, medication, or toxin resulting in undesirable symptoms and side effects. In the DSM-IV classification, the substances used or induced are alcohol, amphetamine, caffeine, cannabis, cocaine, hallucinogen, inhalant, nicotine, opium, phencyclidine, sedatives, polysubstances, and other or unknown substances. Disorders that result from this include substance-induced psychotic disorder, mood disorders, anxiety disorder, sexual dysfunction, and sleep disorders.