substandard housing

தரமற்ற வீடுகள்

தமிழ் விளக்கம்

உள்ளூர் கட்டிட விதிகளின்படி, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிராத, வசதியற்ற வீடுகள். மின்சார வசதியும் இணைப்புமற்ற, பாய்நீர்க் கழிப்பறை வசதியில்லாத, சுடு நீரும் குளிர் நீரும் வசதியில்லாத, வீட்டை வெப்பமூட்டும் வசதிகள் இல்லாத, துவலைக்குழாய் வசதியில்லாத, குழியலறைகளோடு, காரை பெயர்ந்த தரைத் தளமும் சுவர்களும், பழுதடைந்த, உடைந்த ஜன்னல்கள், தண்ணீர்க்கசிவு, கொறித்துத் தின்னும் (எலி, அணில்) விலங்குகளிருக்கும், கரையான் போன்ற பூச்சித் தாக்குதல்களிருக்கும் வீடுகளைத் தரமற்ற வீடுகள் என்று அமெரிக்க அரசின் வீட்டுவதித் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இலக்கணம் வகுத்திருக்கின்றது. மேலே சொன்ன பிரச்சனைகள் இல்லாமலிருந்து, பராமரிப்புப் பிரச்சனைகளான அடிக்கடி பழுதடையும் பாய்நீர்க் கழிப்பறை, புகை போக்கியில்லாத சமயலறை, வெப்ப அறை, wash basin என்ற மித்தம் /அங்கணம் / அடுக்களைக் கழி நீர்த்தொட்டி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் அடுப்பு இல்லாத வீடுகள் ஓரளவிற்கு தரமானது, வாழத் தகுதியுடையது என்று கருதப்படுகிறது.

English

Dwelling places whose physical or structural deficiencies preclude having a safe, secure, reasonably comfortable home. According to the U.S. Department of Housing and Urban Development (DHUD), a dwelling unit is severely substandard if it lacks electricity, hot or cold water, a flush toilet, a shower or bath, and effective heating equipment and possesses at least five basic maintenance problems such as holes in floors or walls, broken windows, water leaks, rodent or insect infestations, and so forth. A dwelling unit is moderately substandard if it does not have the aforementioned severe problems but does have such maintenance problems as frequently broken flush toilets; unvented gas or heating sources; and no sink, refrigerator, or stove.