sudden infant death syndrome (SIDS)

தீடீரென்று குழந்தை இறக்கும் நோய்க்குறி, தொட்டிற் சிசு இறப்பு, சிசு திடீர் இறப்பு. தொட்டில் மரணம்

தமிழ் விளக்கம்

நோயெதுவுமின்றி நலமாக இருக்கும் குழந்தை திடீரெனக் காரணமெதுவுமின்றி இறப்பது தொட்டில் இறப்பென (crib Death) கூறப்படுகிறது. உலகளவில் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு பல குழந்தைகள் இறக்கின்றன. இதைக் கட்டில் இறப்பெனவும் (Cot Death) கூறுவர். மருத்துவதில் இதைத் திடீரென்று குழந்தை இறக்கும் நோய்க்குறி (Sudden infant death syndrome) என்பர். இத்தகைய மரணங்கள் பொதுவாக குழந்தையின் முதல் மாதத்திலேயே மிக அதிகமாக இடம்பெறுகிறது. 2 ஆம், 3 ஆம் மாதங்களிலும் ஓரளவு உண்டு. ஆயினும் 6 மாதங்களுக்குப் பிறகு மிகக் குறைவே. இது ஏன் ஏற்படுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆயினும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல காரணங்கள் சேரந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள். தூக்கத்தையும், விழித்தெழுதலையும் கட்டுப்படுத்தும் மூளையின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏதாவது ஒரு பிரச்சனை காரணமாயிருக்கலாம். உதாரணமாகத் தூக்கத்தில் இருக்கும் குழந்தையின் முகத்தின் மேல் (அதாவது மூக்கு வாய் இரண்டும் மூடும்படியாக) துணி விழுந்தால், அதனால் ஏற்படக் கூடிய சுவாசத் தடையைச் சமாளிக்கு முகமாக திணறி விழித்தெழுதலை மூளையால் ஏற்படுத்த முடியாதது காரணமாகலாம் என்கிறார்கள். ஆயினும் தொட்டில் மரணம் எப்பொழுதுமே ஆழ்ந்த தூக்கத்தில்தான் நடக்கும் என்றில்லை. தாயின் மடியிலோ அல்லது குட்டித் தூக்கம் (Pram) செய்யும்போது கூட நிகழலாம். இது வசதி குறைந்த குடும்பங்களில் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இம்மாதிரியான சிசு மரணங்கள் ஆசியச் சமூகத்தில் குறைவு என்று சொல்லப்படுகிறது. குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளிலும், முக்கியமாக 37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகளிடையே கூடுதலாக இம்மரணம் ஏற்படலாம். பிறக்கும்போது வழமையை விட எடை குறைந்த பிள்ளைகளிலும் இம்மரணம் அதிகம். இரட்டைக் குழந்தைகளிடையேயும் அதிகம் காணப்படுகிறது. குடும்பத்தில் ஏற்கனவே வேறு குழந்தைகள் அவ்வாறு இறந்திருந்தாலும் சாத்தியம் அதிகம். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் இறப்பது அதிகமாம். இம்மரணம் பொதுவாகக் குளிர்காலத்தில் அதிகமாகும்.
பார்க்க: Apnea - மூச்சின்மை, சுவாசம் தடைப்படுதல் - சுவாச உறுப்புகளில் ஏற்படும் இடையூறால் சுவாசிப்பது தடைபடல். இது மாதிரி தடைபடும் சுவாசத்தால் குழந்தகளுக்குத் தொட்டிலிலே மரணம் நிகழலாம்.

English

The unexplained death of a young child, most frequently occurring between ages two and five months, sometimes referred to as "crib death". The cause is not yet well understood, but speculation centers around the possibility that some babies have not established adequate defense responses to respiratory problems. See also apnea.