suffrage

வாக்குரிமை, பொது வாக்குரிமை, சர்வசன வாக்கெடுப்பு

தமிழ் விளக்கம்

ஆங்கிலத்தில் Universal suffrage அல்லது universal adult suffrage அல்லது general suffrage அல்லது common suffrage என்பது குறிப்பிட்ட வயதடைந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை விரிவுபடுத்துவதாகும். தவிர இது முதிரா அகவையினருக்கும் (டெமனி வாக்களிப்பு) குடியல்லாதோருக்கும் விரிவுபடுத்துவதையும் குறிக்கும். வாக்குரிமை, வாக்களிக்கும் உரிமை மற்றும் வாக்களிக்க வாய்ப்பு என்ற இரு விழுமியங்களைக் கொண்டிருப்பினும் பொது வாக்குரிமை என்பது வாக்களிப்பு உரிமையை மட்டுமே குறித்தது. நடப்பு அரசு எத்தனை முறை வாக்காளர்களைக் கலந்து முடிவுகள் எடுக்கிறது என்பதைக் குறிப்பிடுவதில்லை. எங்கெல்லாம் பொது வாக்குரிமை உள்ளதோ அங்கு வாக்களிக்கும் உரிமை இனம், பால், நம்பிக்கை, செல்வம், அல்லது சமூகநிலை ஆகியவற்றால் கட்டுப்படுத்தப் படுவதில்லை. சமூகப்பணியாளர்களில் பலர், குறிப்பாக பெண்களுக்கான வாக்குரிமையைப் பெற போராடியிருக்கின்றார்கள்.
பார்க்க: Seneca Falls Convention - செனெக பால்ஸ் மாநாடு - நியூயார்க் நகரத்தில் செனெக பால்ஸ் என்னுமிடத்தில், 1848 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்திய பெண்களின் மாநாடு. பெண்களின் நிலையை எடுத்துக்காட்டிய இந்த மாநாட்டின் விளைவாகவே, 1920 இல் அமெரிக்காவின் ஆரசியலமைப்புச் சட்டத்தின் 19 வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பெண்களுக்கான வாக்குரிமை அங்கீகாரிக்கப்பட்டது. இந்த வாக்குரிமையே அமெரிக்கப் பெண்கள் விடுதலை இயக்கத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

English

The legal right to vote. Many of the early social workers were women who advocated for this right and were called "suffragettes". See also Seneca Falls Convention.