suicidal ideation
தற்கொலை எண்ணம்
தமிழ் விளக்கம்
குடும்பப் பிரச்னை, நோய், வரதட்சணை, போதை மருந்து, தேர்வில் தோல்வி, காதல் பிரச்னை, வறுமை, வேலை இல்லாத பிரச்னை, நெருங்கிய உறவுகள் மரணம், சமூகத்தில் மதிப்பு குறைதல், கடன், பொருளாதார வீழ்ச்சி என 11 காரணங்கள், தற்கொலைக்கு முன் வைக்கப்படுகின்றன. சிறு சிறு காரணங்களுகெல்லாம் தற்கொலை நடப்பது அதிகரித்துள்ளது. அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, மன அழுத்தம், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாகச் சுரக்கும்போது மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. தற்கொலை செய்துகொண்டவர்களின் மூளையை ஆராய்ந்தபோது imipramine receptor sites குறைவாக இருப்பது தெரியவந்தது. Imipramine receptors என்பவை செரடோனின் சுரக்கும் இடங்கள். செரடோனின் சுரத்தலைத் தூண்டிவிடும் மருந்துகள் கொடுப்பதால் தற்கொலை எண்ணம் குறைக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொள்பவர்களிடம் அடிப்படை குணாதிசயங்களில் மாற்றம், எதிலும் பிடிப்பின்றி தனியே ஒதுங்கியிருத்தல், அடிக்கடி எரிச்சலடைதல், வழக்கமான வேலைகளில் நாட்டமின்மை, திடீரென அழுகை, கோபம், துக்கம் ஆகிய உணர்வுகளுக்கு ஆட்படுதல், மரணத்தைப்பற்றி அடிக்கடி பேசுதல் போன்ற சில மாற்றங்கள் முன்னதாகக் காணப்படுகின்றன. உடனிருப்பவர்களால் அந்த மாற்றங்களைக் கண்டறிந்து தற்கொலைகளைத் தடுக்க வாய்ப்பு இருக்கிறது. குடி, போதைக்கு அடிமையானோருக்கு, சிறு பிரச்னை என்றாலும், திடீரென தற்கொலை எண்ணம் வந்துவிடும். அவர்களைப் போதையில் இருந்து மீட்பது அவசியம். திருமணமாகாமல் தனிமையில் இருப்போர், ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முற்படுகின்றனர்.
மனச்சிதைவு நோய், தீராத நோய், கேன்சர் போன்ற பாதிப்புள்ளோருக்கும் இந்த எண்ணம் வருகிறது. இவர்களுக்கு மருத்துவ சிகிச்சையுடன், மன நல சிகிச்சையும் அளிக்க வேண்டும்.
மனச்சிதைவு நோய், தீராத நோய், கேன்சர் போன்ற பாதிப்புள்ளோருக்கும் இந்த எண்ணம் வருகிறது. இவர்களுக்கு மருத்துவ சிகிச்சையுடன், மன நல சிகிச்சையும் அளிக்க வேண்டும்.
English
Serious contemplation of suicide, or thought patterns that lead to killing oneself. Social workers note specific clues and circumstances to judge the probability that a client is going to attempt suicide. Among those that suggest higher probability are depression, especially when accompanied by a sense of hopelessness or unconnectedness with others in the present or past, major changes in sleep patterns, clear or implied statements indicating a wish to die or an intention to commit suicide, substance abuse, a recent experience of irrevocable loss, absence of a support system, easy access to lethal means (weapons, drugs, and so on), previous suicide attempts, suicide or suicide attempts by role models, and strong feelings of failure and rejection.