sunshine laws

திறந்தநிலைச் செயல்பாட்டிற்கான சட்டங்கள், வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் சட்டங்கள், தகவல் பெற வழிவகுக்கும் சட்டங்கள்

தமிழ் விளக்கம்

அரசுத் துறைகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கவும், அரசுத் துறை தொடர்பான தகவல்கள் மக்களுக்குக் கிடைக்க வழிசெய்யும் சட்டங்கள். அரசுத்துறை சம்பந்தப்பட்ட கூட்டங்கள், ஆவனங்கள், அரசுத்துறையின் செயல்முறைகள் பொதுமக்களின் கவனத்திற்கு வருமாறும், அவர்கள் பங்கெடுக்க வழிவகுக்குமாறும், அவர்கள் சோதனையிட வாய்ப்பளிக்குமாறும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தும் சட்ட விதிமுறைகள். ஒரு சில அவசரக் கூட்டங்கள், நடவடிக்கைகளைத் தவிர பெரும்பாலான அரசுத்துறைக் கூட்டங்கள் மக்களுக்கு முன்னறிவித்து, பலரும் பங்கேற்க ஏதுவாக, நடத்தப்படவேண்டும் என்ற சட்டவிதிமுறைகள். இந்தியாவில் இச்சட்டம் தகவல் பெரும் உரிமைச் சட்டம் எனப்படுகிறது. அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவி பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். குறிப்பாகத் தகவல்களைப் பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது, தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை என இச்சட்டம் கூறுகின்றது. மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை, பொதுமக்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் (sunshine laws) மற்றும் தகவல் பெரும் உரிமைச் சட்டங்கள் (Right to Information) உதவுகின்றன.

English

Federal requirements, based on a law enacted in 1976 (Government in the Sunshine Act, P.L. 94-409), stating that the meetings and hearings of most federal agencies-especially those that directly affect people's economic, legal, and welfare rights-must be conducted in public. This term now applies to the requirements that other organizations and levels of government conduct their business open to the scrutiny of those affected.