superego
மேனிலை மனம், சூப்பர் ஈகோ, அதியுயர் மனக்கூறு, அதியகம், அதிசுயம்
தமிழ் விளக்கம்
சிக்மண்ட் பிராய்ட் அவர்களின் உளஇயக்கக் கோட்பாட்டின்படி மனித மனம் அல்லது மனித ஆளுமை (குணவியல்பு) மூன்று பகுதிகளைக் கொண்டது. ஆங்கிலத்தில் அது Id, Ego, Superego என்றழைக்கப்படுகிறது. id என்பதை அது என்றும், ஆழ்மனவுந்தல் என்றும், உணர்வு உந்தும் இயல்பு என்றும், Ego என்பதை அகம், சுயம், தன்முனைப்பு என்றும், நான் என்னும் முனைப்பு என்றும், Superego என்பதை அதியகம், அதிசுயம், அதியுயர் மனக்கூறு என்றும் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது. மனக் கட்டமைப்பு மாதிரியின்படி, 'அது' 'ஆழ்மனவுந்தல்' 'உணர்வு உந்தும் இயல்பு' வெளி உலகைப்பற்றிய, யதார்த்த நிலைமைகளைப் பற்றிக் கவலைப்படாமல், மனித வாழ்வின் பிரதான நோக்கமான இன்பத்தினை அடைதலையே (Pleasure Principle) குறிக்கோளாகக் கொண்டியங்குகிறது. 'அகம்', 'சுயம்', 'தன்முனைப்பு', 'நான் என்னும் முனைப்பு', ஒருங்கிணைக்கப்பட்ட உண்மைப் பகுதியாக, எதார்த்த நிலையைப் புரிந்துகொண்டு இன்பத்தினை அடைதலை, இன்பத் தூண்டல்களையும் எதார்த்த நிலையையும் மத்தியஸ்தம் செய்து நிறைவேற்றுகிறது. அதியகம், அதிசுயம், அதியுயர் மனக் கூறு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மத குருமார்கள் முதலானவர்கள் கற்றுத்தந்த நன்னெறிகளுடாகவும் சமுதாயத்தில் நிலவும் சட்ட திட்டங்களின் விளைவாகவும் ஒரு மனிதன் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாதிப்புகளிற்கேற்ப நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, இன்ப விளைவைப் பூர்த்தி செய்யவோ, தடுக்கவோ, மறக்கவோ அதற்கு மாற்று தேடவோ முனைகிறது. அதியகம் மனதின் இச்சைகளை நெறிப்படுத்தி, சரி தவறு என்ற நியாயங்களின் அடிப்படையில் பூர்த்தி செய்கிறது.
English
In psychodynamic theories, that part of the psyche or personality that regulates the individual's ethical standards, conscience, and sense of right and wrong. The superego is said to begin its development by identifying with the apparent values and rules established by parent figures. See also ego and id.