superstition

மூட நம்பிக்கை, போலிக்கோட்பாடு, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கை, இயற்கை கடந்த ஆற்றலச்சம், அறியாநிலைக்கிலி, தவறான மதிப்பச்சம், ஆதாரமற்ற நம்பிக்கை, மூட பக்தி, குருட்டுப் பழக்கவழக்க மரபைப் பின்பற்றும் பண்பு

தமிழ் விளக்கம்

மூடநம்பிக்கை என்றால் ஒரு விஷயத்தை அல்லது பொருளை அதன் உண்மைத் தன்மைக்கு எதிராகச் சரி என்றோ அல்லது பலன்களுக்கு எதிராகப் பலன் தரும் என்றோ நம்புதல் ஆகும் மூடநம்பிக்கை அதை நம்பும் தனிமனிதருக்கோ, குழுக்களுக்கோ, சமுதாயத்திற்கோ கேடு விளைவுக்குமானால், அந்த மூடநம்பிக்கையை விழிப்புணர்வு கொண்டு தவிர்த்தல் அல்லது தடைசெய்தல் அவசியம். நம்புவர் உட்பட யாருக்கும் மூடநம்பிக்கைள் கேடு விளைவிக்காது என்று கருதப்படும் பட்சத்தில் அதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்தத் தேவையில்லை. சில மூடநம்பிக்கைகள் அடிப்படையில் உண்மையற்று இருப்பினும், அது மனித மனதிற்கு நம்பிக்கை தருவதன் மூலம் நன்மைகளைத் தரக்கூடியன. சில மூடநம்பிக்கைகள் பொழுதுபோக்காக அமைகின்றன. எதிர்காலத்தைக் கணித்துக் கூறுவதாகச் சொல்லும் சோதிடமும் ஒருவகையில் மூடநம்பிக்கையே. எ.கா. 'வானகெஞ்சி' என்பது விருதுநகர் மாவட்டத் தெலுங்கு பேசும் கிராம மக்கள், மழை இன்றிப் பஞ்சம் ஏற்படின் தங்கள் கிராமங்களில் மழை பொழிய வேண்டி, புரட்டாசி மாதத்தில் நடத்தும் ஒரு விழா. வானகெஞ்சி எனும் தெலுங்கு சொல்லுக்குத் தமிழில் மழைக்கஞ்சி என்று பொருள். மழையின்றி பஞ்சம் ஏற்படின் கிராமச் சிறுவர்கள் ஒன்றுகூடி வீடுதோறும், 'வானலேது வர்ஸாலேது வானகெஞ்சி பொயண்டா, புல்லலேது புடகலேது புல்லகெஞ்சி பொயண்டா', என தெலுங்கு மொழியில் கூவி 'மழைக்கஞ்சி' பிச்சை எடுத்தால் மழைபெய்யும் என்ற நம்பிக்கை. செய்வினை என்பது பழங்காலந்தொட்டு இலங்கை, கேரளா மற்றும் உலகின் பல பாகங்களிலும் ஒரு மனித சக்தியினை இன்னொருவரின் பூசை முறையினால் கட்டுப்படுத்தப்படும் செயலாக அழைக்கப்படுகின்றது. இதன் தோற்றம் மற்றும் இதனைச் சார்ந்த நிகழ்வுகள் பலராலும் இன்றளவும் உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாத நிலையாகவே உள்ளது. இச்செய்வினை செய்யும் முறையினைப் பலர் உணமையெனவும், சிலர் செய்வினையை ஒரு மூட நம்பிக்கை எனவும் கூறுவர். இருப்பினும் செய்வினை எனப்படுவது மனிதர் ஒருவரின் சாதகக் குறிப்பின்படி, அவருக்குப் பகையாக உள்ள கோள்களிற்குப் பலமுறைகள் பூசை செய்வதால் ஏற்படும் பின் விளைவுகளே ஆகும். இது தவிர சூனியம் வைத்தல், பேயோட்டுதல், தேவலோகம், நரகலோகம், சகுனம் பார்த்தல், பலியிடுதல் (சாமிக்கு), சாமி ஆட்டம், ஆவிகளுடன் பேசுவது, கூடுபாய்தல், சோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் போன்ற பல மூட நம்பிக்கைகள் தமிழர்களிடத்தில் உள்ளன.

English

Beliefs and practices founded on nonrational expectations, culture-bound syndromes, folk tales, and fears of or answers for unexplained phenomena. Clinicians do not consider superstitious ideas or practices to be indicative of mental disorder unless they become so constricting or time-consuming that they interfere with activities of daily living (ADLs).