supervision
மேற்பார்வையிடுதல், காரியவிசாரணை, கண்காணிப்பு
தமிழ் விளக்கம்
மேற்பார்வையிடல் என்பது கல்வி, வணிகம், மருத்துவம், சமூகம் என்று பலதளங்களிலும் பயன்படுத்தப்படும் சொல்லாடல். சமூகப்பணியில் கற்பித்தல் மற்றும் பணிச் செயலாக்கம் என்ற இரு கோணங்களிலிருந்தும் மேற்பார்வை கையாளப்படுகிறது. சமூகப்பணியாளர்களின் தொழில் திறனை மேம்படுத்தி, செம்மைப்படுத்தி, சமூகப்பணியாளர்களின் பணி ஒழுக்கத்தைச் செழுமையாக்கி, அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவையைத் தந்துதவ சமூக சேவை நிறுவனங்களில் பரவலாகக் கையாளப்படும் நிர்வாகம் மற்றும் கற்பிக்கும் முறையிலான செயல்முறைகளைச் சமூகப்பணி மேற்பார்வை என்பர். நிர்வாக ரீதியாக, ஒவ்வொரு சமூகப்பணியாளரின் திறனுக்குப் பொருத்தமான வாடிக்கையாளரை ஒதுக்குவதுடன், வாடிக்கையாளரின் பிரச்சனை குறித்த மதிப்பீடு என்ன, செயல்திட்டம் என்ன என்பதைப் பற்றி சமூகப்பணியாளருடன் தொடர்ந்து கலந்துரையாடி தேவையான வழிகாட்டுதல்களை மேற்பார்வையாளர் வழங்குவார். கற்பித்தல் ரீதியாக, சமூகப்பணி பயிலும் மாணவர்கள், சமூகப்பணியின் தத்துவார்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளவும், சேவை நிறுவனங்களின் செயல்முறைகளைத் தெரிந்து கொள்ளவும், தன்னைப்பற்றிய சுய புரிதலை வளர்த்துக்கொள்ளவும், நிறுவனத்திலும், சுற்றியுள்ள சமுதாயத்திலும் கிடைக்கின்ற உதவியாதாரங்களைக் கண்டறியவும், செயல்பாடுகளை முன்னுரிமைப்படுத்தவும், சமூகப்பணியின் அறிவுத்தளத்தை விரிவாக்கவும், திறன்களை கூர்மைப்படுத்திக்கொள்ளவும் சமூகப்பணி பயிலும் மாணவருக்கு மேற்பார்வையாளர் தொடர்ந்து உதவுவார். பணி அனுபவம் குறைந்த சமூகப்பணியாளர்கள் நேரடிக் கண்காணிப்பிற்குள்ளாகி நேரடிப் பயிற்சிக்குள்ளாவார்கள். அனுபவம் வாய்ந்த சமூகப்பணியாளர்களுக்கு, சக பணியாளர்களுடன் கலந்துரையாடி தங்கள் ஐயங்களை அவர்களே தெளிவுபடுத்திக்கொள்ளவும், பணியாளர் பயிற்சி மற்றும் குழுக்களில் பணியாற்றும் சூழ்நிலையை அளிக்க மேற்பார்வையாளர் திட்டமிடுவார். நிர்வாக மேற்பார்வை என்பது பணிபுரியும் நிறுவன நடைமுறைகளை உள்வாங்கி நிறுவனப் பொறுப்புடமைக்கு பங்கம் வராமல் பாதுகாக்கவும், கற்பித்தல் மேற்பார்வை என்பது வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி, அதை வைத்து சமூகப்பணியின் அறிவுத்தளத்தையும், தொழில் முனைப்பை உள்வாங்கச் செய்வதுமாகும்.
English
An administrative and educational process used extensively in social agencies to help social workers further develop and refine their skills, enhance staff morale, and provide quality assurance for the clients. Administratively, supervisors often assign cases to the most appropriate social worker, discuss the assessment and intervention plan, and review the social worker's ongoing contact with the client. Educationally, supervision is geared toward helping the social worker better understand social work philosophy and agency policy, become more self-aware, know the agency's and community's resources, establish activity priorities, and refine knowledge and skills. Less experienced workers tend to be supervised according to a tutorial model, while more experienced workers use more case consultation, peer-group interactions, staff development, or social work teams. Educational supervision (oriented toward professional concerns and related to specific cases) is distinguished from administrative supervision (oriented toward agency policy and public accountability).